செவ்வாய், 28 ஜூன், 2022

திருக்குறள்-அன்புடைமை அதிகாரம்

அன்புடைமை அதிகாரம்



1)அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.

   பொருள்:

               அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை;அன்புக்குரியவரின்   துன்பத்தைப் பார்த்ததுமே நம் அன்பு    கண்ணீராக வெளிப்பட்டு  நிற்கும்.

  சொற்பொருள்:

                     தாழ்-தாழ்ப்பாள் 
                     ஆர்வலர்-அன்புள்ளவர் 
                     புன்கணீர் -சிறிய கண்ணீரே 
                     பூசல் தரும்-வெளிப்படுத்துதல் 

2)அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
    என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்:

                 அன்பில்லாதவர் எல்லாப்பொருளும் தமக்கு மட்டும் உரியது என்று எண்ணுவர்.அன்பு உடையவரோ தம் உடல் பொருள்,ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிவிடுவர்.

சொற்பொருள்:

                     அன்பு இலார் -அன்பு இல்லாதவர் 
                     அன்புடையர் -அன்புள்ளவர் 
                     என்பும்  -எலும்பும் 

3)அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்:

               உடம்போடு உயிர் இணைந்து இருப்பதைப் போல,வழக்கை நெறியோடு அன்பு இணைந்து வருகிறது.

சொற்பொருள்:

                     என்போடு  - உடம்போடு  
                     வழக்கு  -வாழ்வின் பயன்

4)அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பு என்னும்நாடாச் சிறப்பு.

   பொருள்:

                அன்பு விருப்பத்தைத் தரும்,விருப்பம் அனைவரிடமும் நட்பு கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.
                             

சொற்பொருள்:

                     ஈனும்  - அளிக்கும்   
                     நாடாச் சிறப்பு
  -அளவற்ற சிறப்பு 

5)அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்:

        அன்போடு பொருந்திய வழக்கை நெறியைக் கடைபிடித்தவர் உலகில் மகிழ்ச்சி உடையவர்.

சொற்பொருள்:

                     எய்தும் - அடையும்   
                    அமர்ந்த   -வாழ்ந்த 
                     வழக்கு - வாழ்வின் பயன்

6)அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் 
    மரத்திற்கும் அஃதே துணை 

பொருள்:

           அன்பு அறத்தை மட்டும்,சார்ந்து என்று கூறுவோர் அறியாதவர்.வீரத்திற்கும் அன்புதான் துணை.

சொற்பொருள்:

              அன்புசார்பு -அன்பு துணையாகும் 
              மரத்திற்கும்-வீரத்திற்கும் 

7)என்பி லதனை வெயில்போலக் காயுமே 
   அன்பி   லதனை அறம்.

பொருள்:

          எலும்பில்லாத உயிர்களை வெயில் வருத்தி அழிப்பது போல அன்பில்லாத உயிர்களை ஆறாம் வருத்தி அழிக்கும்.

சொற்பொருள்:

         என்பிலதனை-எலும்பில்லாத புழுவை 
          அறம் காயும் -தருமம் துன்புறுத்தும்

8)அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
    வற்றல் மரம்தளிர்ந் தற்று.

பொருள்:
      

            மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
      
அணி:இல்பொருள் உவமை அணி

9.)புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
     அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

 பொருள்:

     வெளியே உள்ள உறுப்புகள் தீங்கு செய்யும் உடம்பின் உள் உறுப்பான அன்பு இல்லாதவர்க்கு.

சொற்பொருள்:

            யாக்கை-உடம்பு 
            புறத்து உறுப்பு-வெளி அவயங்கள்

10)அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
     என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்:

        அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம்.அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்புதான்,அங்கு யுயிர் இல்லை.

சொற்பொருள்:

             அன்பின் வழியது-அன்பு நெறியில் வாழ்வதே 
             என்பு-எலும்பு 

திங்கள், 27 ஜூன், 2022

உடுமலை நாராயணகவி & மருதகாசி

 

உடுமலை நாராயணகவி

  • தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியரும்,எழுத்தாளரும் ஆவர்.
  • நாட்டுப்புற பாடல் மெட்டுக்களை திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்.
  • திருக்குறள் கருத்துக்களை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
  • பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப்பாடல்களை எழுதி சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர்.
  • "பகுத்தறிவு கவிராயர்" என மக்களால் அழைக்கப்படுகிறார்.
  • கலைமாமணி பட்டம் பெற்றவர்.
  • இவரது காலம் 15.09.1989 முதல் 23.05.1981 வரை. 



மருதகாசி

  • பெற்றோர்:அய்யம் பெருமாள் - மிளகாயி அம்மாள் ஆவர்.
  • ஊர்:திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிக்காடு.
  • சிறப்பு பெயர்:திரைக்கவி திலகம்.
  • காலம்:13.02.1920 முதல் 29.11.1989 வரை.
  • "அ.மருதகாசி பாடல்கள்" என்னும் தலைப்பில் திரைப்படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டன.
  • அதில் உழவும் தொழிலும்,தாலாட்டு,சமூகம்.தத்துவம்.நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறிப்புகள்:

  • பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவரது காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை.
  • பாவேந்தர் பாரதிதாசனிடம் முறையாக பாடம் கற்ற இவர்,அவரால் தனது வலது கை என பாராட்டப்பெற்றார்.
  • 1954ம் ஆண்டு படித்தபெண் என்ற திரைப்படத்திற்காக முதன்முதலாக பாடல் எழுதினார்.
  • உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொது உடைமை சிந்தனைகளையும் தமது பாடல்களில் புகுத்தியவர்.
  • எளிய நடையில் கவிதைகளையும்,திரை இசை பாடல்களையும் இயற்றிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் "மக்கள் கவிஞர்" என்றழைக்கப்பட்டார்.
  • "தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது  ஆனாலும் மக்கள் வயிறு காயுது" என்ற பாடல்வரிகளை கேட்ட தோழர் ஜீவானந்தன்,"நீ மீண்டும் தோன்றிய பாரதியடா"என கல்யாண சுந்தரத்தைப் பாராட்டினார்.

மறைவு:

          பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திருமணம் முடிந்த 5 வருடங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார்.

மணிமண்டபம்:

         தமிழ் நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவை போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கல்யாண சுந்தரம் மணிமண்டபம் நிறுவப்பட்டது.

கண்ணதாசன்



இயற்பெயர்:முத்தையா 

பெற்றோர்:சாத்தப்பன் -விசாலாட்சி 

ஊர்:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டி

காலம்:24.06.1927 முதல் 17.10.1981 வரை.

புனைப்பெயர்கள்:

           காரைமுத்துப்புலவர் 

           வணங்காமுடி 

           கமகப்ரியா 

           துப்பாக்கி 

           பார்வதிநாதன் 

           ஆரோக்கியசாமி 

நூல்கள்:

           ஆட்டனத்தி ஆதிமந்தி 

           மாங்கனி 

           அர்த்தமுள்ள இந்துமதம் 

           ஏசுகாவியம் 

நாவல்கள்:

          சேரமான் காதலி 

          ராசதண்டனை (கம்பர்-அம்பிகாபதி வரலாறு)

          ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி 

          வேளங்குடித் திருவிழா 

இதழ்கள்:

         கண்ணதாசன் 

         தென்றல் 

         முல்லை 

         கடிதம் 

         தமிழ் மலர் 

         திரை 

         திருமகள் 

         சண்டமாருதம் 

பிறகுறிப்புகள்:

  • தமிழகத்தின் அரசவைக்கவிஞராக இருந்தார்.
  • தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் ஆவர்.4000 மேற்பட்ட திறப்பாடல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.
  • 1980ம் ஆண்டு சாகித்ய  அகாதமி விருது பெற்றார் சேரமான் காதலி என்ற படைப்புக்காக.



ஞாயிறு, 26 ஜூன், 2022

சுரதா

சுரதா 


 

வழக்கை குறிப்பு:

  •  இயற்பெயர்:இராசகோபாலன் 
  • பெற்றோர்:திருவேங்கடம் -செண்பகம்.
  • ஊர்:நாகை மாவட்டத்தில் உள்ள பழையனூர்.
  • பரதிதாசனுடன் மீது கொண்ட பற்றின்காரணமாக தம் பெயரை சுபுரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்.அதன் சுருக்கமே சுரதா.
  • இவர் பாடலில் அதிக உவமையை பயன்படுத்தியதால் "உவமைக்கவிஞர்" எனச்சிறப்பிக்கப்பட்டார்.

பாரதிதாசனுடன் தொடர்பு:

               1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை  முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

எழுத்துப்பணி:

  • சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
  • 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
  • 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
  • பாரதிதாசனின் தலை மாணாக்கராகக் கருதத் தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
  • தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
  • பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பெற்ற சிறப்புகள்:

•       1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.

சுரதாவின் படைப்புகள்:

தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)

துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)

சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)

சிக்கனம்

சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)

அமுதும் தேனும், 1983

பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991

வினாக்களும் சுரதாவின் விடைகளும்

நெய்தல் நீர்

உதட்டில் உதடு

எச்சில் இரவு

எப்போதும் இருப்பவர்கள்

கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்

சாவின் முத்தம்

சிறந்த சொற்பொழிவுகள்

சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)

சுவரும் சுண்ணாம்பும்

சொன்னார்கள்

தமிழ்ச் சொல்லாக்கம்

தொடாத வாலிபம்

நெஞ்சில் நிறுத்துங்கள்

பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5

பாவேந்தரின் காளமேகம்

புகழ்மாலை

மங்கையர்க்கரசி

முன்னும் பின்னும்

வார்த்தை வாசல்

வெட்ட வெளிச்சம்

மறைவு:

இவர் தன்னுடைய 84ம் வயதில் 2006 சூன் 20 செவ்வாய்க்கிழமை அன்று, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.



வாணிதாசன்

 வாணிதாசன்



  1. இயற்பெயர்:எதிராசுலு என்கிற அரங்கசாமி 
  2. பெற்றோர்:அரங்க திருக்காமு - துளசியம்மாள்
  3. ஊர்:புதுவையை அடுத்துள்ள வில்லியனூர் 
  4. காலம்:22.07.1915 முதல் 07.08.1974 வரை ஆகும்.
  5. இவர் பாரதிதாசன் பரம்பரையினர்.
  6. இவர் கவிதைகள் இயற்கையின் அழகை எழிலுறக் காட்டுவதால் தமிழகத்தின் "வேர்ட்ஸ் வொர்த்" என்றழைக்கப்பட்டார்.
  7. கவிஞரேறு,பாவலர்மணி என்னும் பட்டங்கள் பெற்றார்.ரமி என்கிற புனைபெயரும் உண்டு.
  8. இவர் தமிழ்- பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டு உள்ளார்.
  9. பிரெஞ்சு குடியரசு தலைவரால் செவிலியர் விருது பெற்றார்.
  10. மயிலை சிவமுத்து இவருக்கு தமிழ்நாட்டு தாகூர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
  11. தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

வாணிதாசன் எழுதிய நூல்கள்:

  1. இரவு வரவில்லை
  2. இன்ப இலக்கியம்
  3. இனிக்கும் பாட்டு
  4. எழில் விருத்தம்
  5. எழிலோவியம்
  6. குழந்தை இலக்கியம்
  7. கொடி முல்லை
  8. சிரித்த நுணா
  9. தமிழச்சி
  10. தீர்த்த யாத்திரை
  11. தொடுவானம்
  12. பாட்டரங்கப் பாடல்கள்
  13. பாட்டு பிறக்குமடா
  14. பெரிய இடத்துச் செய்தி
  15. பொங்கற்பரிசு
  16. வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
  17. வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
  18. வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
  19. விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ


முடியரசன்

            முடியரசன்




இயற்பெயர்:துரைராசு. 

பெற்றோர்:சுப்புராயலு - சீதாலெட்சுமி.

ஊர்:தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.

காலம்:1920 முதல் 1998 வரை.

இவர் பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர்.

காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.

பறம்பு மலையில் நடந்த விழாவில் "கவியரசு" என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப் பெற்றார்.

நூல்கள்:

             பூங்கொடி 

             காவியப்பாவை 

             வீரகாவியம்  

            முடியரசன் கவிதைகள்

பூங்கொடி என்னும் கவியத்துக்காக 1966இல்  தமிழக அரசு பரிசு வழங்கியது.

தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்.


சிறப்புகள்

  • இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
  • அழகின் சிரிப்பு கவிதை முதல் பரிசு- பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை-1950
  • 'திராவிட நாட்டின் வானம்பாடி'பட்டம் - பேரறிஞர் அண்ணா-1957
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம், பொற்பதக்கம் -1966
  • முடியரசன் கவிதைகள் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1966
  • வீரகாவியம் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1973
  • மாநில நல்லாசிரியர் விருது- 1974
  • சங்கப்புலவர் பட்டம்-குன்றக்குடி அடிகளார் (1974)
  • பாவரசர் பட்டம்,பொற்பேழை- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், உலகத்தமிழ்க்கழகம், பெங்களூரு- 1979
  • பொற்கிழி-பாவாணர் தமிழ்க்குடும்பம்,நெய்வேலி-1979
  • பொற்குவை உரூ.10,000-மணிவிழா எடுப்பு- கவிஞரின் மாணவர்கள், காரைக்குடி-1979
  • பொற்கிழி- பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, கவிஞர் மீரா,சிவகங்கை-1979
  • கவிப்பேரரசர் பட்டம், பொற்கிழி- கலைஞர், தி.மு.க மாநில இலக்கிய அணி-1980
  • தமிழ்ச்சான்றோர் விருது,பதக்கம்- தமிழகப்புலவர்குழு, சேலம்-1983
  • கலைஞர் விருது- என்.டி.இராமராவ்,ஆந்திர முதல்வர்,தி.மு.க முப்பெரும் விழா-1988
  • பாவேந்தர் விருது(1987க்கு உரியது) (தமிழ்நாடு அரசு) -1989
  • பூங்கொடி என்ற வீறுகவியரசர் இயற்றிய மொழிப்போர்க்காப்பியம் 1993-இல் இந்திராணி இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது. இந்நூலைப்பற்றிப் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை "உலக மொழிக்காப்பியங்கள். மூன்றனுள் ஒன்றாகக் கருதப்பெறும் சிறப்புடையது 'பூங்கொடி' என்று வாழ்த்தினார்.
  • பொற்கிழி- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்-1993
  • சிறந்த தமிழ்த்தொண்டிற்கான 'அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்',வெள்ளிப்பேழை, பொற்குவை உரூ.50,000-அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை-1993
  • கல்வி உலகக் கவியரசு விருது- அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம்-1996
  • பொற்கிழி- பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி-1997
  • கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு)-1998
  • வீரகவியரசரின் படைப்புகள் தமிழ்நாட்டரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. - 2000

சனி, 25 ஜூன், 2022

திருக்குறள் தொடர்பான செய்திகள்

                                                                                                 திருக்குறள்



  • திருக்குறள் இலக்கண குறிப்பு -"அடையடுத்த கருவியாகு பெயர்".
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறக்கருத்துக்களை கூறும் நூல்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக பாவால் பாடப்பட்ட நூல்.
  • "அ" கரத்தில் தொடங்கி "ன" கரத்தில் முடியும் நூல்.
  • "தமிழ் மாதின் இனிய உயர்நிலை" என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல்.
  • திருக்குறளின் சிறப்பை எடுத்து கூறும் நூல் "திருவள்ளுவ மாலை"
  • திருவள்ளுவ மாலையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-55, பாடியவர்கள்-53.
  • சிவசிவ வெண்பா,தினகர வெண்பா,வடமாலை வெண்பா,சோமேசர் முதுமொழி வெண்பா ,குமரேச வெண்பா போன்றவையும் குறளின் சிறப்பையே கூறுகின்றன.
  • "இயற்கை வாழ்வில்லம்" என குறிக்கப்படும் நூல்.
  • ரஷ்யா வின் அணு துளைக்காத கிரம்ளின் மாளிகையில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ் நூல் திருக்குறள்.
  • இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள ஒரே தமிழ் நூல்.
  • மலையத்துவசான் மகன் ஞானப்பிரகாசம் 1812 ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.

திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள்:

  1. செந்நாப் போதார்             6.பெருநாவலர் 
  2. நாயனார்                              7.தேவர் 
  3. பொய்யில் புலவர்             8.தெய்வப்புலவர் 
  4. நான் முகனார்                    9.முதற்பாவலர் 
  5. மாதனுபங்கி                       10.வள்ளுவ நாயனார்

திருக்குறளின் சிறப்பு பெயர்கள்:

  1. பொது மறை                       6.உலகப் பொதுமறை
  2. தமிழ் மறை                         7.முப்பால்
  3. வாயுறை வாழ்த்து           8.முதுமொழி
  4. உத்திர வேதம்                    9.தமிழ் வேதம்
  5. பொய்யா மொழி            10.பொருளுரை

திருக்குறளின் உரை:

  1. திருக்குறள் பழமையான உரை -பதின்மர் உரை.
  2. திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பதின்மர்-தருமர்,தாமத்தர்,திருமலையர்,பரிதி,பரிப்பெருமாள்,பரிமேலழகர்,மல்லர்,மணக்குடவர்,நச்சர்,காளிங்கர்.
  3. இப்பதின்மரில் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.இப்பதின்மர் உரையில் சிறந்த உரையாக கருதப்படுவது பரிமேலழகர் உரை.
  4. பதின்மர் எழுதிய உரையில் நமக்கு கிடைத்தது 5 மட்டுமே.
  5. பரிமேலழகர் உரையுடன் முதன் முதலாக திருக்குறளை பதிப்பித்தவர் இராமானுஜ கவிராயர்(1840).
  6. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர்-கே.எம்.பாலசுப்ரமணியன்.

நூலின் அமைப்பு:

  • இது அறம்,பொருள்,இன்பம்(காமம்) எனும் முப்பெரும் பிரிவுகளை உடையது.
  • 9 இயல்களையும்,133 அதிகாரங்களையும்,1330 குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
  • திருக்குறள் 7 சீர்களால் அமைந்த வெண்பாக்களை கொண்டது.7 என்னும் எண்ணுப்பெயர் எட்டு குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
  • இதன் மொத்த அதிகாரங்கள் 133 இதன் கூட்டுத்தொகை 7.மொத்த குறட்பாக்களில் எண்ணிக்கை 1330 இதன் கூட்டு தொகையும் 7.
  • திருக்குறளில் 10 அதிகாரம் பெயர்கள் உடமை என்னும் பெயரில் உள்ளன.
  • திருக்குறளில் 2முறை வரக்கூடிய ஒரே அதிகாரத்தலைப்பு குறிப்பறிதல்.

அறத்துப்பால் -(38 அதிகாரம்),இயல்கள் - 4

பாயிரயியல் -4 அதிகாரம் 
இல்லறவியல் -20 அதிகாரம்
துறவறவியல் -13 அதிகாரம்
ஊழியல் - 1 அதிகாரம்

பொருட்பால்  -(70 அதிகாரம்),இயல்கள் - 3

அரசியல் -25 அதிகாரம்
அங்கவியல் -32 அதிகாரம்
ஒழிபியல் -13 அதிகாரம்

இன்பத்துப்பால்   -(25 அதிகாரம்),இயல்கள் - 2

களவியல் - 7 அதிகாரம்
கற்பியல் - 18 அதிகாரம்

மொழிபெயர்ப்பு:

  1. இஃது உலகில் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  2. இலத்தீன் - வீரமாமுனிவர் (அறம்,பொருள் மட்டும்).
  3. ஆங்கிலம்-ஜி.யு.போப்(1886).
  4. ஜெர்மன்-கிரௌல்
  5. பிரெஞ்சு -ஏரியல் 
  6. இந்தி -பி.டி.ஜெயின்
  7. தெலுங்கு -வைத்தியநாத பிள்ளை 
  8. வாட மொழி -அப்பா தீட்சதர்

தமிழக அரசின் தொண்டு:

  •  தமிழக அரசு ஒவொரு நாளும் தை 2ம் நாளை திருவள்ளுவர் தினமாக கொண்டாடி வருகிறது.
  • 1971-ம் ஆண்டு முதல் தமிழ் இலக்கியத்துறையில் சிறப்பு பெற்ற நபர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.
  • திருவள்ளுவரின் சிறப்பு கருதி'கன்னியாகுமரி கடல் பகுதியில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு 1971ம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டை கணக்கீட்டு,அது முதற்கொண்டு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
  • திருவள்ளுவர் ஆண்டு -கி.மு.31.

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:

 கிறிஸ்து ஆண்டு (கி.பி) + 31 திருவள்ளுவர் ஆண்டு.
     (எ.கா)2022+31=2053
கி.பி.2022-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2053 என்று கூறுவோம்.

புகழுரைகள்:

  1.  "வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே"-பாரதிதாசன்.
  2. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே"-பாரதிதாசன்.
  3. "வள்ளுவன் தன்னை உலகினிக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" - பாரதியார் 
  4. "யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் யாருமில்லை"-பாரதியார்.
  5. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"-பழமொழி.
  6. "கடுகைதுளைத்தேழ் கடலைப் புகட்டி குருக்கத்தி தரித்த குறல்"-இடைக்காடனார்.

வெள்ளி, 24 ஜூன், 2022

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

                      1.இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெருங்கவிஞர்கள்

                                          4.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 


  1. பெற்றோர் : சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி
  2. ஊர் : நாகர்கோவில் அடுத்துள்ள தேரூர்.
  3. இவரின் ஆசிரியர் சாந்தலிங்கத் தம்பிரான்
  4. தமிழின் முதல் குழந்தைக் கவிஞர்.

நூலகள்:
                    மலரும் மாலையும் 
                   ஆசிய ஜோதி
                   மருமக்கள் வழி மான்மியம் 
                   காந்தளூர் சாலை 
                   தேவியின் கீர்த்தனைகள் 
                   உமர்கய்யாம் 
  • காந்தளூர் சாலை என்பது வரலாற்று நூல்
  • மருமக்கள் வழி மான்மியம் என்பது நகைச்சுவை எள்ளல் நூல் 
  • தேவியின் கீர்த்தனைகள் என்பது இசைப் பாடநூல் 
  • ஆசிய ஜோதி எனும் நூல் ஆர்னால்டு எழுதிய "லைட் ஆப் ஆசியா" என்ற நூலின் மொழிபெயர்ப்பு.
  • உமர்கய்யாம் என்பவர் 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர்.இவர் இம்மை மறுமை பற்றி ரூபாயத் எனும் பெயரில் எழுதிய செய்யுள்களின் தொகுப்பை கவிமணி மொழிபெயர்த்துள்ளார்.
  • இதில் 115  பாடல்கள் உள்ளன.(ரூபாயத் -நான்கடி செய்யுள்.
          


நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

                        1.இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெருங்கவிஞர்கள்

                                  3. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்



நாமக்கல் கவிஞர் குறிப்பு:

                            இயற்பெயர்:வெ.இராமலிங்கனார்

                               பெற்றோர்:வெங்கட்ராமன் -அம்மணி அம்மாள் 

                                            ஊர் :மோகனூர் நாமக்கல் மாவட்டம் 

                       

பாரதியார்

                     1)இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெருங்கவிஞர்கள் 

                                                           1. பாரதியார்  

 பாரதியார் குறிப்பு 

இயற்பெயர் : சுப்பிரமணி.

பெற்றோர் :சின்னசாமி -லட்சுமி அம்மாள்.

இவரது ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரம்.

இவரது காலம் 11-12-1882 முதல் 11-09-1921 வரையாகும்.

எட்டயபுர சமஸ்தான புலவர்கள் இவருக்கு "பாரதி" எனும் பட்டத்தை அளித்தனர் 

இவரது புனைப்பெயர்கள் :

                          1.காளிதாசன்         5.நித்திய தீரர் 

                          2.சக்திதாசன்         6.ஓர் உத்தம தேசாபிமானி 

                          3.மகாகவி                7.தேசிய கவி 

                          4.சாவித்ரி

இவர் தன்னை "ஷெல்லி தாசன்" என்று அழைத்துக்கொண்டார்.

புது கவிதைக்கு முன்னோடி பாரதி.பாரதியின் புது கவிதைக்கு முன்னோடி "வால்ட் விட்மன்".

கவிதையில் சுய சரிதம் எழுதிய முதல் கவிஞர்.

தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்.

சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்.

பாரதியின் பாடல்களை முதன்முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பரலி.சு.நெல்லையப்பர்.

பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணஸ்வாமி ஐயர்.

பாரதியின் பாடல்களை ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடமிருந்து வாங்கி நாட்டுடைமையாக்கியவர் ஓமந்தூர் "பி.ராமசாமி செட்டியார்".

பாரதி தன் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடற்கு அளித்தார்.

தற்போது புகழ் பெற்று விளங்கும் பாரதியின் படத்தை வரைந்தவர் ஆர்ய என்ற பாஷ்யம்.

பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தை வழங்கியவர் வ.ராமசாமி ஐயங்கார்(வ.ரா ).


பாரதியார் இதழ்கள்:

                  1.1905 இல்  "சக்ரவர்த்தினி" என்ற இதழ் தொடங்கினார்.

                  2.சுதேசிமித்திரன் எனும் இதழின் துணை                                           ஆசிரியராகவும்,இந்தியா,விஜயா என்ற இதழின் ஆசிரியராகவும்       பணியாற்றினார்.

                  3.கர்மயோகி,பாலபாரதம் முதலான ஆங்கில இதழ்களை நடத்தினார்.


பாரதியார் நூல்கள்:

               கண்ணன் பாட்டு 

               குயில் பாட்டு 

               பாப்பா பாட்டு முதலான பாடல்களையும் ,

               ஞானரதம் 

               சந்திரிகையின் கதை 

              தராசு முதலான உரை நடை நூல்களையும் எழுதியுள்ளார்.

பாரதிதாசன்

               1)இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெருங்கவிஞர்கள்

                                                   2.பாரதிதாசன் 


பாரதிதாசன் குறிப்பு:

                    இயற்பெயர்:சுப்புரத்தினம்.

                    பெற்றோர் :கனக சபை -லக்குமி அம்மாள்

                    ஊர் :புதுவை 

                   காலம்:24-4-1891 முதல் 21-4-1964

                    பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.

                    புதுவை அரசினர் கல்லூரியில் 16 வயதில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

                    இவர் எழுதிய "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்னும் பாடலை புதுவை அரசு தனது வாழ்த்துப் படலாகக் கொண்டுள்ளது.


பாரதிதாசன் இதழ்: குயில் 

பாரதிதாசன் புனைப்பெயர்கள்:

                        1.புரட்சிக்கவிஞர் 

                        2.பாவேந்தர் 

                        3.தமிழ் நாட்டின் ரசூல் கம்சதேவ்.

பாரதிதாசன் நூல்கள்:

 இசையமுது                                             அமைதி 

 மணிமேகலை வெண்பா                குடும்ப விளக்கு 

 காதலா கடமையா                               இளைஞர் இலக்கியம் 

 பாண்டியன் பரிசு                                 இருந்த வீடு 

 காதல் நினைவுகள்                              சௌமியன் 

 சஞ்சீவி பர்வதத்தின் சாரல்            கண்ணகி 

 எதிர்பாராத முத்தம்                            நல்ல தீர்ப்பு 

 கழைகூத்தியின் காதல்                     குறிஞ்சி திட்டு

 பிசிராந்தையார்                                    தமிழ் இயக்கம் 

 சேரத்தாண்டவம்                                   புரட்சி காப்பியம் 

 அழகின் சிரிப்பு                                     தமிழச்சியின் கத்தி

 இரண்யன் (அ) இணையற்ற வீரன்

 

பிசிராந்தியர் நாடகம்  சாகித்ய அகாதமி பரிசு பெட்ரா நூல்.

இயற்கையை வருணிப்பது அழகின் சிரிப்பு.

பொதுவுடைமையை வலியுறுத்துவது சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.

கற்ற பெண்களின் சிறப்பை கூறுவது குடும்ப விளக்கு.

கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது இருண்ட வீடு

பில்கனியம் என்ற நூலின் தழுவல் புரட்சிக்காப்பியம்.

இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...