1.இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெருங்கவிஞர்கள்
3. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்
நாமக்கல் கவிஞர் குறிப்பு:
இயற்பெயர்:வெ.இராமலிங்கனார்
பெற்றோர்:வெங்கட்ராமன் -அம்மணி அம்மாள்
ஊர் :மோகனூர் நாமக்கல் மாவட்டம்
இவர் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் ஆவார்.
சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு நடுவணரசு "பத்மபூஷன்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
இவர் "காந்தியாக்கவிஞர்" என மக்களால் அழைக்கப்பட்டார்.
இவர் முதன் முதலில் வரைந்த ஓவியம் ஸ்ரீ இராம கிருஷ்ண பரமஹம்சர்.
பாரதியரால் "பலே பாண்டியா! நீர் ஒரு புலவர் என்பதில் ஐயமில்லை" என்று பாராட்டப்பெற்றார்.
நாமக்கல் கவிஞர் நூல்கள்:
மலைக்கள்ளன் (நாவல்)
பிராத்தனை (கவிதை)
என் கதை (சுயசரிதம்)
அவனும் அவளும் (கவிதை)
சங்கொலி (கவிதை)
மாமன் மகள் (நாடகம் )
அரவணை சுந்தரம் (நாடகம் )
கம்பனும் வாழ்மீகியும்
திருக்குறளும் பரிமேலழகரும்
நாமக்கல் கவிஞர் மேற்கோள்கள்:
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது"
"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கோர் குணமுண்டு "
" தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"
"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக