திருக்குறள்
- திருக்குறள் இலக்கண குறிப்பு -"அடையடுத்த கருவியாகு பெயர்".
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறக்கருத்துக்களை கூறும் நூல்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக பாவால் பாடப்பட்ட நூல்.
- "அ" கரத்தில் தொடங்கி "ன" கரத்தில் முடியும் நூல்.
- "தமிழ் மாதின் இனிய உயர்நிலை" என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல்.
- திருக்குறளின் சிறப்பை எடுத்து கூறும் நூல் "திருவள்ளுவ மாலை".
- திருவள்ளுவ மாலையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-55, பாடியவர்கள்-53.
- சிவசிவ வெண்பா,தினகர வெண்பா,வடமாலை வெண்பா,சோமேசர் முதுமொழி வெண்பா ,குமரேச வெண்பா போன்றவையும் குறளின் சிறப்பையே கூறுகின்றன.
- "இயற்கை வாழ்வில்லம்" என குறிக்கப்படும் நூல்.
- ரஷ்யா வின் அணு துளைக்காத கிரம்ளின் மாளிகையில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ் நூல் திருக்குறள்.
- இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள ஒரே தமிழ் நூல்.
- மலையத்துவசான் மகன் ஞானப்பிரகாசம் 1812 ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள்:
- செந்நாப் போதார் 6.பெருநாவலர்
- நாயனார் 7.தேவர்
- பொய்யில் புலவர் 8.தெய்வப்புலவர்
- நான் முகனார் 9.முதற்பாவலர்
- மாதனுபங்கி 10.வள்ளுவ நாயனார்
திருக்குறளின் சிறப்பு பெயர்கள்:
- பொது மறை 6.உலகப் பொதுமறை
- தமிழ் மறை 7.முப்பால்
- வாயுறை வாழ்த்து 8.முதுமொழி
- உத்திர வேதம் 9.தமிழ் வேதம்
- பொய்யா மொழி 10.பொருளுரை
திருக்குறளின் உரை:
- திருக்குறள் பழமையான உரை -பதின்மர் உரை.
- திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பதின்மர்-தருமர்,தாமத்தர்,திருமலையர்,பரிதி,பரிப்பெருமாள்,பரிமேலழகர்,மல்லர்,மணக்குடவர்,நச்சர்,காளிங்கர்.
- இப்பதின்மரில் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.இப்பதின்மர் உரையில் சிறந்த உரையாக கருதப்படுவது பரிமேலழகர் உரை.
- பதின்மர் எழுதிய உரையில் நமக்கு கிடைத்தது 5 மட்டுமே.
- பரிமேலழகர் உரையுடன் முதன் முதலாக திருக்குறளை பதிப்பித்தவர் இராமானுஜ கவிராயர்(1840).
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர்-கே.எம்.பாலசுப்ரமணியன்.
நூலின் அமைப்பு:
- இது அறம்,பொருள்,இன்பம்(காமம்) எனும் முப்பெரும் பிரிவுகளை உடையது.
- 9 இயல்களையும்,133 அதிகாரங்களையும்,1330 குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
- திருக்குறள் 7 சீர்களால் அமைந்த வெண்பாக்களை கொண்டது.7 என்னும் எண்ணுப்பெயர் எட்டு குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
- இதன் மொத்த அதிகாரங்கள் 133 இதன் கூட்டுத்தொகை 7.மொத்த குறட்பாக்களில் எண்ணிக்கை 1330 இதன் கூட்டு தொகையும் 7.
- திருக்குறளில் 10 அதிகாரம் பெயர்கள் உடமை என்னும் பெயரில் உள்ளன.
- திருக்குறளில் 2முறை வரக்கூடிய ஒரே அதிகாரத்தலைப்பு குறிப்பறிதல்.
அறத்துப்பால் -(38 அதிகாரம்),இயல்கள் - 4
பாயிரயியல் -4 அதிகாரம்
இல்லறவியல் -20 அதிகாரம்
துறவறவியல் -13 அதிகாரம்
ஊழியல் - 1 அதிகாரம்
பொருட்பால் -(70 அதிகாரம்),இயல்கள் - 3
அரசியல் -25 அதிகாரம்
அங்கவியல் -32 அதிகாரம்
ஒழிபியல் -13 அதிகாரம்
இன்பத்துப்பால் -(25 அதிகாரம்),இயல்கள் - 2
களவியல் - 7 அதிகாரம்
கற்பியல் - 18 அதிகாரம்
மொழிபெயர்ப்பு:
- இஃது உலகில் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- இலத்தீன் - வீரமாமுனிவர் (அறம்,பொருள் மட்டும்).
- ஆங்கிலம்-ஜி.யு.போப்(1886).
- ஜெர்மன்-கிரௌல்
- பிரெஞ்சு -ஏரியல்
- இந்தி -பி.டி.ஜெயின்
- தெலுங்கு -வைத்தியநாத பிள்ளை
- வாட மொழி -அப்பா தீட்சதர்
தமிழக அரசின் தொண்டு:
- தமிழக அரசு ஒவொரு நாளும் தை 2ம் நாளை திருவள்ளுவர் தினமாக கொண்டாடி வருகிறது.
- 1971-ம் ஆண்டு முதல் தமிழ் இலக்கியத்துறையில் சிறப்பு பெற்ற நபர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.
- திருவள்ளுவரின் சிறப்பு கருதி'கன்னியாகுமரி கடல் பகுதியில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- தமிழக அரசு 1971ம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டை கணக்கீட்டு,அது முதற்கொண்டு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
- திருவள்ளுவர் ஆண்டு -கி.மு.31.
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:
கிறிஸ்து ஆண்டு (கி.பி) + 31 திருவள்ளுவர் ஆண்டு.
(எ.கா)2022+31=2053
கி.பி.2022-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2053 என்று கூறுவோம்.
புகழுரைகள்:
- "வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே"-பாரதிதாசன்.
- "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே"-பாரதிதாசன்.
- "வள்ளுவன் தன்னை உலகினிக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" - பாரதியார்
- "யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் யாருமில்லை"-பாரதியார்.
- "ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"-பழமொழி.
- "கடுகைதுளைத்தேழ் கடலைப் புகட்டி குருக்கத்தி தரித்த குறல்"-இடைக்காடனார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக