முடியரசன்
இயற்பெயர்:துரைராசு.
பெற்றோர்:சுப்புராயலு - சீதாலெட்சுமி.
ஊர்:தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.
காலம்:1920 முதல் 1998 வரை.
இவர் பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர்.
காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
பறம்பு மலையில் நடந்த விழாவில் "கவியரசு" என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப் பெற்றார்.
நூல்கள்:
பூங்கொடி
காவியப்பாவை
வீரகாவியம்
முடியரசன் கவிதைகள்
பூங்கொடி என்னும் கவியத்துக்காக 1966இல் தமிழக அரசு பரிசு வழங்கியது.
தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்.
சிறப்புகள்
- இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
- அழகின் சிரிப்பு கவிதை முதல் பரிசு- பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை-1950
- 'திராவிட நாட்டின் வானம்பாடி'பட்டம் - பேரறிஞர் அண்ணா-1957
- பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம், பொற்பதக்கம் -1966
- முடியரசன் கவிதைகள் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1966
- வீரகாவியம் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1973
- மாநில நல்லாசிரியர் விருது- 1974
- சங்கப்புலவர் பட்டம்-குன்றக்குடி அடிகளார் (1974)
- பாவரசர் பட்டம்,பொற்பேழை- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், உலகத்தமிழ்க்கழகம், பெங்களூரு- 1979
- பொற்கிழி-பாவாணர் தமிழ்க்குடும்பம்,நெய்வேலி-1979
- பொற்குவை உரூ.10,000-மணிவிழா எடுப்பு- கவிஞரின் மாணவர்கள், காரைக்குடி-1979
- பொற்கிழி- பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, கவிஞர் மீரா,சிவகங்கை-1979
- கவிப்பேரரசர் பட்டம், பொற்கிழி- கலைஞர், தி.மு.க மாநில இலக்கிய அணி-1980
- தமிழ்ச்சான்றோர் விருது,பதக்கம்- தமிழகப்புலவர்குழு, சேலம்-1983
- கலைஞர் விருது- என்.டி.இராமராவ்,ஆந்திர முதல்வர்,தி.மு.க முப்பெரும் விழா-1988
- பாவேந்தர் விருது(1987க்கு உரியது) (தமிழ்நாடு அரசு) -1989
- பூங்கொடி என்ற வீறுகவியரசர் இயற்றிய மொழிப்போர்க்காப்பியம் 1993-இல் இந்திராணி இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது. இந்நூலைப்பற்றிப் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை "உலக மொழிக்காப்பியங்கள். மூன்றனுள் ஒன்றாகக் கருதப்பெறும் சிறப்புடையது 'பூங்கொடி' என்று வாழ்த்தினார்.
- பொற்கிழி- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்-1993
- சிறந்த தமிழ்த்தொண்டிற்கான 'அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்',வெள்ளிப்பேழை, பொற்குவை உரூ.50,000-அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை-1993
- கல்வி உலகக் கவியரசு விருது- அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம்-1996
- பொற்கிழி- பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி-1997
- கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு)-1998
- வீரகவியரசரின் படைப்புகள் தமிழ்நாட்டரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. - 2000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக