அன்புடைமை அதிகாரம்
1)அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
பொருள்:
அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை;அன்புக்குரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே நம் அன்பு கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.
சொற்பொருள்:
தாழ்-தாழ்ப்பாள்
ஆர்வலர்-அன்புள்ளவர்
புன்கணீர் -சிறிய கண்ணீரே
பூசல் தரும்-வெளிப்படுத்துதல்
2)அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்:
அன்பில்லாதவர் எல்லாப்பொருளும் தமக்கு மட்டும் உரியது என்று எண்ணுவர்.அன்பு உடையவரோ தம் உடல் பொருள்,ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிவிடுவர்.
சொற்பொருள்:
அன்பு இலார் -அன்பு இல்லாதவர் அன்புடையர் -அன்புள்ளவர் என்பும் -எலும்பும்
3)அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.
பொருள்:
உடம்போடு உயிர் இணைந்து இருப்பதைப் போல,வழக்கை நெறியோடு அன்பு இணைந்து வருகிறது.
சொற்பொருள்:
என்போடு - உடம்போடு வழக்கு -வாழ்வின் பயன்
4)அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும்நாடாச் சிறப்பு.
பொருள்:
அன்பு விருப்பத்தைத் தரும்,விருப்பம் அனைவரிடமும் நட்பு கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.
சொற்பொருள்:
ஈனும் - அளிக்கும்
நாடாச் சிறப்பு -அளவற்ற சிறப்பு
5)அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
பொருள்:
அன்போடு பொருந்திய வழக்கை நெறியைக் கடைபிடித்தவர் உலகில் மகிழ்ச்சி உடையவர்.
சொற்பொருள்:
எய்தும் - அடையும்
அமர்ந்த -வாழ்ந்த
வழக்கு - வாழ்வின் பயன்
6)அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மரத்திற்கும் அஃதே துணை
அமர்ந்த -வாழ்ந்த
வழக்கு - வாழ்வின் பயன்
பொருள்:
அன்பு அறத்தை மட்டும்,சார்ந்து என்று கூறுவோர் அறியாதவர்.வீரத்திற்கும் அன்புதான் துணை.
சொற்பொருள்:
அன்புசார்பு -அன்பு துணையாகும்
மரத்திற்கும்-வீரத்திற்கும்
7)என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
பொருள்:
எலும்பில்லாத உயிர்களை வெயில் வருத்தி அழிப்பது போல அன்பில்லாத உயிர்களை ஆறாம் வருத்தி அழிக்கும்.
சொற்பொருள்:
என்பிலதனை-எலும்பில்லாத புழுவை
அறம் காயும் -தருமம் துன்புறுத்தும்
8)அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்ந் தற்று.
பொருள்:
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
அணி:இல்பொருள் உவமை அணி
9.)புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
பொருள்:
வெளியே உள்ள உறுப்புகள் தீங்கு செய்யும் உடம்பின் உள் உறுப்பான அன்பு இல்லாதவர்க்கு.
சொற்பொருள்:
யாக்கை-உடம்பு
புறத்து உறுப்பு-வெளி அவயங்கள்
10)அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள்:
அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம்.அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்புதான்,அங்கு யுயிர் இல்லை.
சொற்பொருள்:
அன்பின் வழியது-அன்பு நெறியில் வாழ்வதே
என்பு-எலும்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக