ஞாயிறு, 26 ஜூன், 2022

சுரதா

சுரதா 


 

வழக்கை குறிப்பு:

  •  இயற்பெயர்:இராசகோபாலன் 
  • பெற்றோர்:திருவேங்கடம் -செண்பகம்.
  • ஊர்:நாகை மாவட்டத்தில் உள்ள பழையனூர்.
  • பரதிதாசனுடன் மீது கொண்ட பற்றின்காரணமாக தம் பெயரை சுபுரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்.அதன் சுருக்கமே சுரதா.
  • இவர் பாடலில் அதிக உவமையை பயன்படுத்தியதால் "உவமைக்கவிஞர்" எனச்சிறப்பிக்கப்பட்டார்.

பாரதிதாசனுடன் தொடர்பு:

               1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை  முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

எழுத்துப்பணி:

  • சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
  • 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
  • 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
  • பாரதிதாசனின் தலை மாணாக்கராகக் கருதத் தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
  • தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
  • பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பெற்ற சிறப்புகள்:

•       1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.

சுரதாவின் படைப்புகள்:

தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)

துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)

சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)

சிக்கனம்

சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)

அமுதும் தேனும், 1983

பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991

வினாக்களும் சுரதாவின் விடைகளும்

நெய்தல் நீர்

உதட்டில் உதடு

எச்சில் இரவு

எப்போதும் இருப்பவர்கள்

கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்

சாவின் முத்தம்

சிறந்த சொற்பொழிவுகள்

சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)

சுவரும் சுண்ணாம்பும்

சொன்னார்கள்

தமிழ்ச் சொல்லாக்கம்

தொடாத வாலிபம்

நெஞ்சில் நிறுத்துங்கள்

பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5

பாவேந்தரின் காளமேகம்

புகழ்மாலை

மங்கையர்க்கரசி

முன்னும் பின்னும்

வார்த்தை வாசல்

வெட்ட வெளிச்சம்

மறைவு:

இவர் தன்னுடைய 84ம் வயதில் 2006 சூன் 20 செவ்வாய்க்கிழமை அன்று, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...