திங்கள், 27 ஜூன், 2022

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறிப்புகள்:

  • பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவரது காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை.
  • பாவேந்தர் பாரதிதாசனிடம் முறையாக பாடம் கற்ற இவர்,அவரால் தனது வலது கை என பாராட்டப்பெற்றார்.
  • 1954ம் ஆண்டு படித்தபெண் என்ற திரைப்படத்திற்காக முதன்முதலாக பாடல் எழுதினார்.
  • உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொது உடைமை சிந்தனைகளையும் தமது பாடல்களில் புகுத்தியவர்.
  • எளிய நடையில் கவிதைகளையும்,திரை இசை பாடல்களையும் இயற்றிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் "மக்கள் கவிஞர்" என்றழைக்கப்பட்டார்.
  • "தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது  ஆனாலும் மக்கள் வயிறு காயுது" என்ற பாடல்வரிகளை கேட்ட தோழர் ஜீவானந்தன்,"நீ மீண்டும் தோன்றிய பாரதியடா"என கல்யாண சுந்தரத்தைப் பாராட்டினார்.

மறைவு:

          பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திருமணம் முடிந்த 5 வருடங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார்.

மணிமண்டபம்:

         தமிழ் நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவை போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கல்யாண சுந்தரம் மணிமண்டபம் நிறுவப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...