1)இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெருங்கவிஞர்கள்
1. பாரதியார்
பாரதியார் குறிப்பு
இயற்பெயர் : சுப்பிரமணி.
பெற்றோர் :சின்னசாமி -லட்சுமி அம்மாள்.
இவரது ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரம்.
இவரது காலம் 11-12-1882 முதல் 11-09-1921 வரையாகும்.
எட்டயபுர சமஸ்தான புலவர்கள் இவருக்கு "பாரதி" எனும் பட்டத்தை அளித்தனர்
இவரது புனைப்பெயர்கள் :
1.காளிதாசன் 5.நித்திய தீரர்
2.சக்திதாசன் 6.ஓர் உத்தம தேசாபிமானி
3.மகாகவி 7.தேசிய கவி
4.சாவித்ரி
இவர் தன்னை "ஷெல்லி தாசன்" என்று அழைத்துக்கொண்டார்.
புது கவிதைக்கு முன்னோடி பாரதி.பாரதியின் புது கவிதைக்கு முன்னோடி "வால்ட் விட்மன்".
கவிதையில் சுய சரிதம் எழுதிய முதல் கவிஞர்.
தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்.
சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்.
பாரதியின் பாடல்களை முதன்முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பரலி.சு.நெல்லையப்பர்.
பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணஸ்வாமி ஐயர்.
பாரதியின் பாடல்களை ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடமிருந்து வாங்கி நாட்டுடைமையாக்கியவர் ஓமந்தூர் "பி.ராமசாமி செட்டியார்".
பாரதி தன் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடற்கு அளித்தார்.
தற்போது புகழ் பெற்று விளங்கும் பாரதியின் படத்தை வரைந்தவர் ஆர்ய என்ற பாஷ்யம்.
பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தை வழங்கியவர் வ.ராமசாமி ஐயங்கார்(வ.ரா ).
பாரதியார் இதழ்கள்:
1.1905 இல் "சக்ரவர்த்தினி" என்ற இதழ் தொடங்கினார்.
2.சுதேசிமித்திரன் எனும் இதழின் துணை ஆசிரியராகவும்,இந்தியா,விஜயா என்ற இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
3.கர்மயோகி,பாலபாரதம் முதலான ஆங்கில இதழ்களை நடத்தினார்.
பாரதியார் நூல்கள்:
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாப்பா பாட்டு முதலான பாடல்களையும் ,
ஞானரதம்
சந்திரிகையின் கதை
தராசு முதலான உரை நடை நூல்களையும் எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக