திங்கள், 25 ஜூலை, 2022

குறுந்தொகை

 குறுந்தொகை

  1. குறுந்தொகை-குறுமை+தொகை
  2. குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
  3. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து)
  4. பாடியபுலவர்கள்:205 பேர்.
  5. தொகுத்தவர்:பூரிக்கோ.
  6. அடிகள்:4அடிச்சிறுமையும்.- 8 அடிப்பெருமையும் கொண்டது.
  7. கடவுள் வாழ்த்து:பாரதம் பாடிய பெருந்தேவனார் (முருகனை போற்றி பாடியுள்ளார்).
  8. பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை,ஒழுக்கம்,மகளிர் மாண்பு,அறவுணர்வு முதலியவற்றை இந்நூல் வழியே அறியலாம்.
  9. நல்ல எனும் அடைமொழியால் குறிக்கபப்டும் நூல்.
  10. இறைவன் தருமிக்கு அளித்த பாடல் செய்தியை கூறும் நூல்.
  11. இந்நூல் "பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி".

நற்றிணை

நற்றிணை

  1. நல் என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்பட்ட நூல்.
  2. பாடல்கள்-400
  3. புலவர்கள்-275
  4. அடிகள்:9 அடிச்சிறுமையும் -12 அடிப்பெருமையும் கொண்டது.
  5. சிறப்பு பெயர்கள்:நல் நற்றிணை,நற்றிணை நானூறு.
  6. தொகுப்பித்தவர்:பன்னாடு தந்த மாறன் வழுதி 
  7. ஐந்திணைகளையும் குறித்து இந்நூலில் பாடப்பட்டுள்ளது.
  8. ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயறிய பண்பு,விருந்தோம்பல்,அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழரின் உயரிய பண்புகளை எடுத்து கூறும் நூல் நற்றிணை.
  9. நற்றிணைக்கு உரை எழுதி முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் -பின்னத்தூர் நாராயணஸ்வாமி.
  10. தை நீராடல் இந்நூல் கூறப்படுகிறது.
  11. 7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1 
  12.  8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1 
  13.  9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106 
  14.  10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96 
  15.  11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110 
  16.  12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77 
  17.  3 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8

வியாழன், 14 ஜூலை, 2022

தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு நேருஜி,காந்தியடிகள்

நேருஜி

இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்

  • நாடு விடுதலை பெற்றபின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.நேரு 1922 முதல் 1964 வரை,42 ஆண்டுகள் தம்மக்களுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.தாகூரின் விசுவபாரதி கல்ல்லூரியில் இந்திராகாந்தி படித்த பொது,அவர் எழுதிய கடிதம் இது(அல்மோரா மாவட்டச் சிறைச்சாலையில் நேரு இக்கடிதம் எழுதினர்).
  •   இந்திராகாந்தி பேராசிரியர் கிருபாலினியின் உதவியுடன் பாடங்களைப்       படித்தார்.புத்தகம் வாசிப்பது    கடுமையாகவும்,கட்டாயமாகவும்,இருக்கக்கூடாது என்று நேரு கூறுகிறார்.ஆங்கிலப் படைப்பாளிகள் ஷேக்ஸ்பியர்,மில்டன் பற்றி நேரு பெருமைப்படக் கூறுகிறார்.சுவையானவை,சிந்தனையைத் தூண்டுபவை ,சுருக்கமாகவும் வாசிக்க எளிதாகவும் இருக்கும் என்கிறார்.
  • காளிதாசரின் "சாகுந்தலம் நாடகம்" மற்றும் டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்"(இது உலகின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று) பற்றி கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
  • நேருவுக்கு பிடித்த ஆங்கில எழுத்தாளர் பெட்ராண்ட் ரஸ்ஸல்.இவரது ஆங்கிலம் அருமையானது.இவரை அறிவு பூர்வமான எழுத்தாளர் என்கிறார் நேரு.1000 முகங்கள் கொண்டது வாழ்க்கை,அதைப் புரிந்துகொள்ளவும்,சரியாக வாழவும் புத்தகப்படிப்பு அவசியம் என்றும் கூறுகிறார்.

காந்தியடிகள்

  • 1917ம் ஆண்டு ப்ரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை,மாணவர்களுக்கு ஏற்றவண்ணம் கடித்த வடிவில் அமைக்கப்பட்டது.
  • பயிற்று மொழியைப் பற்றி நிறைவான,தெளிவான ஒரு முடிவுக்கு வருவதுதான் கல்வி.கற்பித்தலில் நாம் செய்ய வேண்டிய முதல்  செயல் பயிற்றுமொழியைக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது.இது அடித்தளம் இல்லாமல் கட்டிடத்தை எழுப்புவதனைப் போன்றது.
  • கவி இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்கு காரணம் ,ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த அறிவு மட்டுமின்றி,தம்முடைய தாய்மொழி மீது அவருக்கு இருந்த பற்றுதலும் தான்.
  • முன்சிராம் பேசும்போது அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதற்குக் காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.உயர்ந்த மனம் படைத்த மதன்மோகன் மாளவியாவின் ஆங்கிலப்பேச்சு வெள்ளியைப் போல ஒளிவிட்டாலும்,அவரது தாய்மொழிப் பேச்சு,தங்கத்தைப் போன்று ஒளி இருக்கிறதே அன்றி,மொழியில் இல்லை.
  • பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருத்தல் வேண்டும்.குழந்தைகளுக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும்.சிறந்தப்பயன் ஏற்பட வேண்டுமாயின்,அத்தகைய தொடர்பு இன்றியமையாதது.

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

  சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

ஆண்டு                ஆசிரியர்                                                                          நூல்                                       

1955                     ரா.பி.சேதுப்பிள்ளை                                            தமிழ்இன்பம்                                   
1956                     ஆர்.கிருஷ்ணமூர்த்தி(கல்கி)                         அலையோசை                                
1958                     சி.இராஜகோபாலாச்சாரி                                சக்ரவர்த்தி திருமகள்                
1961                     மு.வரதராசன்                                                       அகல்விளக்கு                                   
1962                     எம்.பி.சோமசுந்தரம்                                        அக்கரைச் சீமையில்             
1963                     பி.வி.அகிலாண்டம்                                            வேங்கையின் மைந்தன்       
1965                     பி.ஸ்ரீ.ஆச்சார்யா                                                   ஸ்ரீ இராமானுஜர் 
1966                     ம.பொ.சிவஞானம்                                               வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு 
1967                     கி.வ.ஜகநாதன்                                                     வீரர் உலகம் 
1968                     ஏ.ஸ்ரீனிவாசன்                                                         வெள்ளைப்பறவை 
1969                     பாரதிதாசன்                                                            பிசிராந்தையார் 
1970                     ஜி.அழகிரிசாமி                                                        அன்பளிப்பு 
1971                     சமுதாயவீதி                                                            பார்த்த சாரதி 
1972                     டி.ஜெயகாந்தன்                                                 சில நேரங்களில் சில மனிதர்கள் 
1973                     ராஜம் கிரிஷ்ணன்                                             வேருக்கு நீர் 
1974                     கே.டி.திருநாவுக்கரசு                                        திருக்குறள் நீதி இலக்கியம் 
1975                    ஆர்.தண்டாயுதம்                                               தற்காலத்தமிழ் இலக்கியம்                      
1977                    இந்திரா பார்த்தசாரதி                                               குருதிப்புனல் 
1978                    வல்லிக்கண்ணன்                                            புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 
1979                   தி.ஜானகிராமன்                                                  சக்தி வைத்தியம் 
1980                   கண்ணதாசன்                                                        சேரமான் காதலி 
1981                   எம்.இராமலிங்கம்                                                  புதிய உரைநடை 
1982                   பி.எஸ்.ராமையா                                                  மணிக்கொடிகாலம் 
1983                   டி.எம்.சி.ரகுநாதன்                                              பாரதி காலமும் கருத்தும் 
1984                   திரிபுர சுந்தரி (லக்ஷ்மி)                                     ஒரு காவிரியைப் போல 
1985                   அ.ச.ஞானசம்பந்தம்                                          கம்பன் புதிய பார்வை 
1986                  க.நா.சுப்பிரமணியன்                                      இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் 
1987                 ஆதவன் சுந்தரம்                                                  முதலில் வரும் இரவு 
1988                  வி.சி.குழந்தை சாமி                                           வாழும் வள்ளுவர் 
1989                   லா.ச.ராமாமிர்தம்                                             சிந்தாநதி 
1990                  சு.சமுத்திரம்                                                         வேரில் பழுத்த பலா 
1991                  கி.இராஜநாராயணன்                                       கோபல்லபுரத்து மக்கள் 
1992                  கோ.வி.மணிசேகரன்                                        குற்றாலக் குறவஞ்சி 
1993                 எம்.வி.வெங்கட்ராம்                                           காதுகள் 
1994                  பொன்னீலன்                                                           புதிய தரிசனங்கள் 
1995                  பிரபஞ்சன்                                                              வானம் வசப்படும் 
1996                 அசோகமித்திரன்                                                  அப்பாவின் சிநேகிதர்
1997                 தோப்பில் முகமது மீரான்                                  சாய்வு நாற்காலி 
1998                  சா.கந்தசாமி                                                          விசாரணைக் கமிசன் 
1999                 எஸ்.அப்துல் ரகுமான்                                            ஆலாபனை 
2000                 தி.தா.சிவசங்கரன்                                                 விமர்சனங்கள் மதிப்புரைகள் 
2001                சி.சு.செல்லப்பா                                                         சுதந்திர தாகம் 
2002                சிற்பி பாலசுப்ரமணியன்                                    ஒரு கிராமத்து நதி 
2003                ரா.வைரமுத்து                                                           கள்ளிக்காட்டு இதிகாசம் 
2004                ஈரோடு தமிழன்பன்                                              வணக்கம் வள்ளுவ 
2005                ஜி.திலகவதி                                                               கல்மரம் 
2006               மு.மேத்தா                                                                   ஆகாயத்துக்கு அடுத்த வீடு 
2007               நீலபத்மநாபன்                                                         இலையுதிர் காலம் 
2008               மேலாண்மை பொன்னுசாமி                             மின்சாரப் பூ 
2009              புவியரசு                                                                       கையொப்பம் 
2010              நாஞ்சில் நாடன்                                                      சூடிய பூ சூடற்க 
2011              சு.வெங்கடேசன்                                                        காவல் கோட்டம் 
2012              டி.செல்வராஜ்                                                              தோல் 
2013            ஜோ.டி.குருஸ்                                                             கொற்கை 
2014             பூமணி                                                                            அஞ்சாடி 
2015            ஆ.மாதவன்                                                                  இலக்கியச்சுவடுகள் 
2016            வண்ணதாசன்                                                             ஒரு சிறு இசை              

திங்கள், 11 ஜூலை, 2022

அகநானூறு

 அகநானூறு

  • அகநானூறு=அகம்+நான்கு+நூறு.
  • அகப்பொருள் சார்ந்த நானூறு அகவற்பாக்களால் தொகுக்கப்பட்ட தொகைநூல்.
  • பாடல்கள்:400,பாடிய புலவரகள்:145
  • அடிகள்:13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் கொண்டது.
  • தொகுத்தவர்:மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்.
  • தொகுப்பித்தவன்:பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர்:பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • சிறப்பு பெயர்கள்:நெடுந்தொகை,பெருந்தொகை நானூறு,அகப்பாட்டு.
  • அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருந்தாலும் அகம் என்ற பெயர் பெற்ற பழந்தமிழ் இலக்கிய நூல் அகநானூறு மட்டுமே.

அகநானூறு மூன்று பகுதிகள்

  1. களிற்றியானை நிறை -120 பாடல்கள்.
  2. மணிமிடை பவளம்-180 பாடல்கள்.
  3. நித்திலக்கோவை -100 பாடல்கள்.

  • வரலாற்றுச் செய்திகளை அதிகமாக் கூறும் அகநூல் - அகநானூறு.
  • குடைவோலை முறை தேர்தல் குறித்து குறிப்பிடப்படும் நூல் அகநானூறு.
  • யவனர் பொன்னைக் கொண்டு வந்து அதற்கு ஈடாக மிளகை பெற்று சென்ற செய்தியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
  • இந்நூலுக்கு உரை எழுதியுள்ளவர் -ந.மு.வேங்கடசாமி நாட்டார்.


  1. 1,3,5,7,9-என வருவன பாலைத்திணை பாடல்கள் (200)
  2. 2,8-என வருவன குறிஞ்சித் திணை -(80)
  3. 4,14-என வருவன முல்லைத்திணை -(40)
  4. 6,16-என வருவன மருதத் திணை -(40)
  5. 10,20-என வருவன நெய்தல் திணை -(40)

i)ஒவையார்

காலம்-சங்க காலம்
சிறப்பு-சங்ககால பெண்பாற் புலவர்களுள் சிறந்து விளங்கியவர்.
இவரது பாடல்களை புறநானூற்றிலும்,நற்றிணையிலும்,குறுந்தொகையிலும் காணலாம்.

"ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
  வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன
  ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை
  மூன்றுடன் ஈன்ற முடங்கள் நிழத்த 
  துறுகல் விடறளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்
  பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
 அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
 நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
 வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
 செலவயர்ந்த திசினால் யானே பலபுலந்து
 உண்ணா உயக்கமொடு உயிர்ச்செலச் சஅய்த் 
 தோளும் தொல்கவின் தொலைய நாளும்
 பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி
 மருந்துபிறி தின்மையின் இருந்துவினை இலனே"

சொற்பொருள்:
  • ஓங்குமலை -உயர்ந்த மலை.
  • பிணவு-பெண்புலி.
  • சிலம்பு-மலைச்சாரல்.
  • உழை-பெண்மான்.
  • உழுவை-ஆண்புலி.
  • ஓர்க்கும்-உற்றுக்கேட்கும்.
இலக்கண குறிப்பு:
    ஓங்குமலை,நீளிடை-வினைத்தொகை.
    பிரிந்தோர்-வினையாலணையும் பெயர்.
   அவிழாக் கோட்டுகிர்,நிரம்பா நீளிடை-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்.
சாஅய்- இசைநிறை அளபெடை.
தொல்கவின்-பண்புத்தொகை.

ஞாயிறு, 10 ஜூலை, 2022

புறநானூறு

புறநானூறு

  1. புறநானூறு-புறம்+நான்கு+நூறு.
  2. புறம் என்பது மரம் செய்தலும்,அறம் செய்தலும்.
  3. மறம்-வீரம்;அறம்-ஈகை,கொடை.
  4. புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது.
  5. இப்பாடல் வழியே பண்டைய தமிழக மன்னர்களின் அறஉணர்வு,வீரம்,கொடை,ஆட்சிச்சிறப்பு,கல்வி,பெருமை முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம்,மக்களுடைய நாகரிகம்,பண்பாடு போன்றவற்றை அறியலாம்.
  6. பாடல்கள்-400.
  7. பாடிய புலவர்கள்-165 பேர்.
  8. பாவகை-அகவற்பா.
  9. அடிகள்-4 அடி சிறுமையும் -40 அடிப்பெருமையும்.
  10. சிறப்புப்பெயர்கள்-புறப்பாட்டு,புறம்,தமிழர் கருவூலம்,நந்தா விளக்கம்.
  11. கடவுள் வாழ்த்துப் பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  12. புறநானூற்றில் 11 புறத் திணைகளும்,65 துறைகளும் உள்ளன.
  13. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்.
  14. புறநானூறில் அதிக பாடல்களை பாடியவர் ஒவையார்.
  15. புறநானூற்றை பதிப்பித்து வெளியிட்டவர்-உ.வே.சா (1984).
  16. அதியம்மனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர்-ஒவையார்.

புறநானூற்று மேற்கோள்கள்:


"செல்வத்துப் பயனே ஈதல்"
 "உண்பது நாழி;உடுப்பவை இரண்டே"-நக்கீரனார்.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"-குடப்புலவியனார்.

"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
  சாலார் சாலார் பாலர் அகுபவே"-கண்ணகனார்.

"கொடைமடம் படுத லல்லது
  படைமடம் படான்பிறர் படைமயக் குறினே"-பரணர்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
"தீதும் நன்றும் பிறர்தர வாரா"-கணியன் பூங்குன்றனார்.

"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"-மதுரை இளநாகனார்.

"கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறலொருவன்
  பணிக்குங் காலை யிறங்குவீர் மாதோ"-நரிவெரூஉத்தலையார்.

i)ஒவையார்

"நாடாகு ஒன்றோ;காடாகு ஒன்றோ;
  அவலாகு ஒன்றோ;மிசையாகு ஒன்றோ;
  எவ்வழி நல்லவர் ஆடவர்
  அவ்வழி நல்ல;வாழிய நிலனே!"
                                                         -ஒவையார்

சொற்பொருள்:
அவல்-பள்ளம்.
மிசை-மேடு.
ஆடவர்-ஆண்கள்.

ii)மோசிகீரனார்

  • பெயர்க்காரணம்-கீரன் என்பது குடிப்பெயர்.
  • ஊர்-தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி.
  • சிறப்பு-சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனால் கவரி வீசப்பெற்ற பெருமைக்குரியவர்.
  • பாடல்கள்-அகநானூறு,நற்றிணை,குறுந்தொகை,போன்ற நூல்களில் இவரது பாடல்கள் உள்ளன.
"நெல்லும் உயிரன்றோ;நீரும் உயிரன்றோ
  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
  அதனால் யான்உயிர் என்பது அறிகை
  வேன்மிகு தானை வேந்தற்குக்  கடனே"
                                                            -மோசிகீரனார்

சொற்பொருள்:
தானை-படை.
கடனே-கடமை.

iii)நக்கீரனார் 

  • சிறப்பு:இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
  • பாடல்கள்:திருமுருகாற்றுப்படையும்,நெடுநல்வாடையும் இயற்றியவர் இவரே.முதல் இலக்கண நூலை அகத்தியர் இயற்றினார் என்றும்,மூன்று தமிழ்ச்சங்கம் இருந்தது என்றும் களவியல் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
  வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
  நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
  கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
  உண்பது நாழி உடுப்பவை இரண்டே
  பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே
  செல்வத்துப் பயனே ஈதல்
 துய்ப்பேம் எனினே தப்புந பலவே"
                                                          -நக்கீரனார்
சொற்பொருள்:
துஞ்சான்-துயிலான்.
ஈதல்-கொடுத்தல்.
மா-விலங்கு.
துய்ப்போம்-நுகர்வோம்.
நாழி-அளவுப்பெயர்.
தப்புந-தவறுவன.

இலக்கணக்குறிப்பு:
நாழி-ஆகுபெயர்.
ஈதல்-தொழிற்பெயர்.
வெண்குடை-பண்புத்தொகை.
கல்லாஒருவற்கும்-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்.
துய்ப்போம்-தன்மைப் பன்மை வினைமுற்று.

iv)கண்ணகனார்

  • பணி-கோப்பெருஞ் சோழனின் அவைக்களப் புலவர்.
  • கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த போது பிசிராந்தையாரின் வருகைக்காக காத்திருந்தார்.
  • கோப்பெருஞ் சோழன் உயிர்துறந்தபோது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடலைப் பாடினார்.

"பொன்னும் துகிரும்,முத்தும் மன்னிய
  மாமலை பயந்த காமரு மணியும்
  இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
  அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
  ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர் 
  சான்றோர் பாலர் ஆப
  சாலார் சாலார் பாலர் ஆகுபவே"
                                                     -கண்ணகனார்

சொற்பொருள்:
துகிர் -பவளம்.
தொடை-மாலை.
சேய - தொலைவு.
கலம் -அணி.

இலக்கணக்குறிப்பு:
பொன்னும் துகிரும்,முத்தும் பவளமும் மணியும்- எண்ணும்மை.
அருவிலை,நன்கலம்-பண்புத்தொகை.
மாமலை-உரிச்சொல்தொடர்.


v)நரிவெரூஉத்தலையார்

  • பாடப்பட்டோன்-சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேறலிரும்பொறை.
  • இவரது பாடல்கள் குறுந்தொகையுலும்,திருவள்ளுவமாலையிலும் உள்ளன.
"பல்சான் றீரே பல்சான் றீரே
  கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
  பயனின் மூப்பிற் பல்சான்றீரே
  கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
  பிணிக்குங்காலை யிரங்குவீர் மாதே
  நலல்து செய்த லாற்றீ ராயினும்
  அல்லது செய்த லோம்புமி னதுதான்
  எல்லாரு முவப்ப தன்றியும்
  நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே"
                                                     -நரிவெரூஉத்தலையார்

பாவகை-நேரிசை ஆசிரியப்பா.
திணை-பொதுவியல்
துறை-பொருண்மொழிக் காஞ்சித்துறை


"எறிந்தி லங்கு சடைமுடி முனிவர் 
  புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று"
                                                     -புறப்பொருள் வெண்பாமாலை

சொற்பொருள்:
கயன்முள் - மீன்முள்.
ஒருவன்-யமன்.
கடுந்திறல்-கடுமையான வலிமை.
பல்சான்றீரே -பலராகிய சான்றோரே.
திரைக்கவுள் -சுருக்கங்களுடைய கன்னம்.
நெறியும்-வழியும்.
ஓம்புமின்-தவிர்த்துவிடுவீர்.

இலக்கணக்குறிப்பு:
கயன்முள்-6ம் வேற்றுமைத்தொகை. 
திரைகவுள் -வினைத்தொகை.
கூர்ம்படை,கடுந்திறல்-பண்புத்தொகை.
ஓம்புமின்-ஏவல் பன்மை வினைமுற்று.
படூஉம் -இசைநிறை அளபெடை (செய்யுளிசை அளபெடை).
ஆற்றீர்-முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று.

சனி, 9 ஜூலை, 2022

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

 எட்டுத்தொகை

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
  ஒத்த பதிற்றுப்பத்து,ஓங்கு பரிபாடல்
  கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
  இத்திறத்த எட்டுத் தொகை"

  1. பத்துப்பாட்டும்,எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள்.இவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
  2. எட்டுத்தொகை குறைந்த அடிகளைக் கொண்டது.
  3. எட்டுத்தொகை நூல்கள் "என் பெருந்தொகை" எனவும் அழைக்கப்படுகிறது.
  4. எட்டுத்தொகை நூல்கள் அனைத்தும் "தொகைநூல்கள்".
  5. தலைவன் தலைவியின் அன்பு வாழ்க்கையைப் பற்றி கூறுவது அகநூல்கள்.இவை தலைவன் தலைவியின் பெயரை குறிப்பிடாது.
  6. தலைவன் தலைவியின் வீரம்.ஈகை வாழ்க்கையைப் பற்றி கூறுவது புறநூல்கள்.இவை தலைவன் தலைவியின் பெயர்  குறிப்பிடப்படும்.

எட்டுத்தொகையில்:

அகநூல்கள்-5(நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,கலித்தொகை,அகநானூறு)
புறநூல்கள்-2(புறநானூறு,பதிற்றுப்பத்து)
அகமும் புறமும் கலந்தது-1 (பரிபாடல்)

பத்துப்பாட்டு

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
  பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
  கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
  பாலை கடாத்தொடும் பத்து"
  1. பத்துப்பாட்டு அதிக அடிகளைக் கொண்டது.
  2. பத்துப்பாட்டிற்க்கு கடவுள் வாழ்த்துப் போல் வைத்து பாடப்பட்டுள்ள நூல்-திருமுருகாற்றுப்படை ,புலவராற்றுப்படை.
  3. ஆற்றுப்படை நூல்கள் பரிசு பெறுபவரின் பெயரால் பாடபப்டும்.திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசு கொடுப்பவரின்(முருகன்) பெயரால் அமைந்துள்ளது.
  4. பத்துப்பாட்டு என்ற தொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர்-மயிலைநாதர்.
  5. பத்துப்பட்டை பாடிய புலவர்கள் எட்டுப் பேர்.




வெள்ளி, 8 ஜூலை, 2022

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-ஏலாதி-கணிமேதாவியர்

ஏலாதி

ஆசிரியர்-கணிமேதாவியர்

காலம்-கடைச்சங்க காலம்

சமயம்-சமணம் 

பாடல்கள்-81 வெண்பாக்கள் 

சிறப்பு-தமிழரின் அருமருந்து 

ஏலத்தை முதன்மையாக கொண்டு இலவங்கம்,சிறுநாவற்பூ,மிளகு,சுக்கு,திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துப்பொருளே ஏலாதி.

நான்கு அடிகளில் ஆறு அறக்கருத்துக்களை கூறுகிறது.

திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே.

ஏலாதி சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துக்களை வலியுறுத்துகிறது.


மேற்கோள்கள்:

"தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி 
வாய்இழந்த வாழ்வினார் வணிகம்போய் இழந்தார் 
கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்கு ஈந்தார்
வைத்து வழங்கி வாழ்வார்"

திருக்குறள்-பண்புடைமை அதிகாரம்

பண்புடைமை அதிகாரம்


1.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
   பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்:யாரிடத்திலும் எளிமையாக பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைதல் எளிது.

சொற்பொருள்:
வழக்கு-நல்வழியை. 
எய்தல்-அடைவது.

2.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
   பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்:அன்புடையவராகத் திகழ்தல்,யுயர்ந்த குடிப்பிறப்பு ஆகிய இரண்டும் பண்பாளரின் இயல்பு.

சொற்பொருள்:
அன்பு உடமை-அன்புள்ளவனாயிருப்பதும்.
ஆன்ற குடிப்பிறத்தல் -சிறந்த குடியிலே பிறத்தல்.

3.உறுப்பொருத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
   பண்பொத்தல் ஒப்புதாம் ஒப்பு.

பொருள்:உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று.பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருக்க வேண்டும்.

சொற்பொருள்:
உறுப்பு ஒத்தல் -உடம்பால் ஒத்திருத்தல்.
ஒப்பதாம் -பொருந்துவதாகிய.
பண்புஒத்தல் -குணத்தால் ஒத்திருத்தல்.

4.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
   பண்புபா ராட்டும் உலகு.

பொருள்:நேர்மையும் அறத்தையும் கொண்டு பிறருக்கு உதவ வேண்டும்.அத்தகைய பண்பாளரையே உலகம் போற்றும்.

சொற்பொருள் :
நயனொடு -நீதியுடன். 
புரிந்து-விரும்பிய.
பாராட்டும்-கொண்டாடுவர்.

5.நகையுள்ளம் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளம்
   பண்புள பாடறிவார் மாட்டு.

பொருள்:விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுதலும் துன்பத்தை தரும்.பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிருப்பின் நல்ல பண்புகள் இருக்கும்.

சொற்பொருள்:
இகழ்ச்சி-இகழ்தல்.
இன்னாது-துன்பந்தருவதாகும்.
படு அறிவர் மாட்டு-இயல்பறிந்து நடப்பவரிடம்.

6.பண்புடையர்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
   மண்புக்கு மண்ணாகிப் போய்விடும்.

பொருள்:உலகம் பண்புடையவர்களாலே நிலைபெற்று இருக்கிறது.இல்லையெனில் இவ்வுலகம் மண்ணோடு மண்ணாகிப் போய்விடும்.

சொற்பொருள்:
இன்றேல்-இல்லாவிட்டால்.
மண்புக்கு-மண்ணில் புகுந்து.

7.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
   மக்கட்பண்(பு) இல்லா தவர்.

பொருள்:ஆறாம் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருப்பினும்,மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓரறிவுடைய மரமாகவே கருதப்படுவர்.

சொற்பொருள்:
அரம்போலும்-அரத்தைப் போன்ற.
கூர்மையரேனும்-கூர்மையான அறிவுள்ளவராயினும்.

8.நண்பற்றா ராகி நயமில செய்வற்கும்
   பண்பாற்றா ராதல் கடை.

பொருள்:நட்புக்கொள்ள இயலாதவராய்த் தீமை செய்பவரிடத்திலும் பண்புடையவராய்ப் பழக இயலாதது இழிவான செயலாகும்.

சொற்பொருள்:
நண்பு-நட்பினை.
நயமில -தீமைகளை.
நடவாமை கடை-குற்றமாகும்.

9.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
   பகலும்பாற் பட்டன் றிருள்.

பொருள்:பிறரோடு பழகிப்பேசி மகிழ இயலாதவருக்கு மிகப்பெரிய இவ்வுலகம் பகலிலும் இருளாகவே தோன்றும்.

சொற்பொருள்:
மாயிரு ஞாலம்-பெரிய பூமி.
இருள்பால் -இருளனிடம்.
பட்டன்று-கிடந்ததாகும்.

10.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
     கலந்தீமை யால்திரிந் தற்று.

பொருள்:பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்றது.

சொற்பொருள்:
பெற்ற -அடைந்த.
நன்பால் -நல்லபால்.

வியாழன், 7 ஜூலை, 2022

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-கலாப்பிரியா

 

கலாப்பிரியா



 

  • இவர் இயற்பெயர் சோமாசுந்தரம்.
  • திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.வங்கியில் பணியாற்றியவர்.
  • குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடத்தியவர்.
  • வெள்ளம்,தீர்ந்தயாத்திரை,மற்றாங்கே,எட்டயபுரம்,சுயம்வரம்,உலகெல்லாம் சூரியன்,அனிச்சம்,வனம் புகுதல்,எல்லாம் கலந்த காற்று ஆகியவை இவர்தம் கவிதை நூல்கள் ஆகும்.
  • இவர் கலைமாமணி விருது,கவிஞர் சிற்பி விருது,விகடன் விருது,சுஜாதா விருது,கண்ணதாசன் இளகிய விருது முதலிய விருதுகளை பெற்றுள்ளார்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-கல்யாண்ஜி

 

கல்யாண்ஜி




  • இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம்.
  • புனைபெயர்கள்-கல்யாண்ஜி,வண்ணதாசன்.
  • கவிதை நூல்கள்:புலரி,இன்று ஒன்று நன்று,சின்னு முதல் சின்னு வரை,மணலுள்ள ஆறு,மூன்றாவது.
  • கவிதைகள்:கனியான பின்னும் நுனியில் பூ,பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்,ஸ்நேகிதங்கள்,ஒளியிலே தெரிவது,அணில் நிறம்,கிருஷ்ணன் வைத்த வீடு போன்றன.
  • சிறுகதைகள்:கலைக்க முடியாத ஒப்பனைகள்,தோட்டத்திற்கு வெளியிலும் சிலபூக்கள்,சமவெளி,பெயர் தெரியாமல் ஒரு பறவை,கனிவு.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-அப்துல் ரகுமான்

 

அப்துல் ரகுமான்



 

  • இவர் மதுரையில் பிறந்தவர்.
  • வாணியம்பாடி இஸ்லாமியர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராகவும்,தமிழ்நாடு வகுப்பு வாரிய தலைவராகவும் இருந்தவர்.
  • பால் வீதி,நேயர் விருப்பம்,ஆலாபனை,சுட்டு விறல்,சொந்த சிறைகள் முதலிய கவிதைகளை தந்தவர்.
  • "ஆலாபனை" என்ற நூலுக்காக "சாகித்ய அகாதமி விருது" பெற்றார்.
  • "கவிக்கோ" என்பது இவருக்கு அளிக்கப்பட்ட பட்டம் ஆகும்.
  • பாரதிதாசன் விருது,தமிழன்னை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-ஈரோடு தமிழன்பன்

 

ஈரோடு தமிழன்பன்




  • இயற்பெயர் ஜெகதீசன்.
  • ஈரோடு தமிழன்பன்,விடிவெள்ளி என்பது இவரது புனைபெயர்கள்.
  • இவர் கோவை மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தவர்.
  • தமிழன்பன் கவிதைகள்,தீவுகள் கரை ஏறுகின்றன,நிலா தேர்வலம்,நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்,காலத்திற்கு ஒரு நாள் முந்து,ஒரு வண்டி சென்றியூ,வணக்கம் வள்ளுவ முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
  • "வணக்கம் வள்ளுவ" என்ற நூலுக்காக "சாகித்ய அகாதமி விருது(2004)" பெற்றவர்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-மு.மேத்தா

 

மு.மேத்தா




  • தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் பிறந்தார்.
  • சென்னை மாநில கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார்.
  • கண்ணீர்ப்பூக்கள்,ஊர்வலம்,அவர்கள் வருகிறார்கள்,நடந்த தெருப்பாடகன்,இதயத்தில் நாற்காலி,மனச்சிறகு,வெளிச்சம் வெளியே இல்லை போன்ற புது கவிதை படைப்புக்களை தந்தவர்.
  • "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-சிற்பி

 

சிற்பி




  • இவர் இயற்பெயர் பாலசுப்ரமணியன் ஆகும்.
  • கோவை மாவட்டம் ஆத்துபொள்ளாச்சியில் பிறந்தவர்.
  • பாரதியார் பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக இருந்தவர்.
  • நிலவுப்பூ,சிரித்த முத்துக்கள்,ஒளிப்பறவை,சர்ப்ப யாகம்,புன்னகை பூக்கும் பூனைகள்,மௌன மயக்கங்கள்,சூரியனிழல்,ஒரு கிராமத்து நதி(சாகித்ய அகாதமி விருது பெற்றது)முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • படைப்பு இலக்கியத்துக்காகவும்,மொழி பெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
  • பாவேந்தர் விருது,கபிலர் விருது,தமிழ்ச்சங்க மகாகவி உள்ளோர் விருது,லில்லி தேவாசிகமணி விருது முதலாளியன் பெற்றுள்ளார்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-ஞானக்கூத்தன்

 

ஞானக்கூத்தன்




  • இவர் இயற்பெயர் அரங்கநாதன்,தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
  • அன்று வேறு கிழமை,சூரியனுக்கு பின்பக்கம்,கடற்கரையில் சில மரங்கள்,மீண்டும் அவர்கள்,முதலியக்கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
  • சாரல் விருது,விளக்கு விருது,முதலிய விருதுகளை பெற்றுள்ளார்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-சி.மணி

 

சி.மணி


  • இவர் இயற்பெயர் எஸ்.பழனிச்சாமி ஆகும்.
  • புனைபெயர் - வே.மாலி,சி.மணி.
  • வரும் போகும்,ஒளிச்சேர்க்கை,இதுவரை நகரம் முதலிய கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
  • "யாப்பும் கவிதையும்"என்பது இவர் எழுதிய விமர்சன நூலாகும்.இது புது கவிதை பற்றிய முதல் ஆய்வு நூல்.
  • தஞ்சை பல்கலைக்கழகத்தின் விருது இருமுறை (1983,1985) பெற்றவர்.
  • விளக்கு விருது,கவிஞர் சிற்பி விருது,ஆசான் விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-பசுவய்யா

 

பசுவய்யா


  • இயற்பெயர் சுந்தரராமஸ்வாமி 
  • நாகர்கோயில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.
  • நடுநிசி நாய்கள்,107 கவிதைகள் ஆகிய கவிதை நூல்களை தந்தவர்.
  • ஒரு புளியமரத்தின் கதை,ஜே.ஜே.சில குறிப்புகள்,பிரசாதம்,அக்கறை சீமையில்,செங்கமலத்தின் சோப்பு,ரத்னாபாயின் ஆங்கிலம் முதலிய கதைகளை எழுதியவர்.
  • இவரை புதுக்கவிதை வரலாற்றில் ஒரு "துருவநட்சசித்திரம்" என்பர்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-ரா.மீனாட்சி

 

ரா.மீனாட்சி


  • இவர் திருவாரூரில் பிறந்தவர் ஆவார்.
  • கவிதையில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக ஜெர்மனி நாட்டின் டாக்டர்.ஹென்றிச் விருது பெற்றுள்ளார்.
  • இவர் எழுதிய கவிதை நூல்கள் நெருஞ்சி,சுடுப்பூக்கள்,தீபாவளி பகல்,மறுபயணம்,கோடி விளக்கு ஆகும்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-தருமு சிவராமு

 

தருமு சிவராமு


  • இலங்கையில் உள்ள திரிகோண மலையில் பிறந்தவர்.
  • பிரமிள்,பானுச்சந்திரன்,அரூப்சிவராம் என்பன இவரது புனைபெயர்கள்.
  • கண்ணாடி உள்ளிருந்து,கைப்பிடியளவு கடல்,மேல்நோக்கிய பயணம்,பிரமிள் கவிதைகள் முதலியன இவரது கவிதை நூல்களாகும்.

புதுக்கவிதையும் வளர்ச்சியும்-சி.சு.செல்லப்பா

 

சி.சு.செல்லப்பா


  • தேனி மாவட்டம் சின்னமனூரில் பிரிந்தவர்.
  • சுதந்திர சங்கு என்ற இதழில் முதன் முதலாக எழுத தொடங்கினார்.மணிக்கொடி இதழ் வரை ஊக்கப்படுத்தியது.
  • "சரசாவின் பொம்மை" என்ற சிறுகதை இவரைச் சிறந்த எழுத்தாளராக அறிமுகப்படுத்தியது.
  • 1958 இல் எழுத்து இதழை தொடங்கினார்,தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் முன்னோடி எழுத்து.
  • சிறுகதைகள்:சரசாவின் பொம்மை,மணல் வீடு,அறுபது,சத்தியாக்ரகி,வெள்ளை என்ற ஐந்து தொகுதிகள்.
  • நாவல்:வாடிவாசல்,ஜீவனாம்சம்,சுதந்திர தாகம்.
  • சுதந்திர தாகம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

புதன், 6 ஜூலை, 2022

கம்பராமாயணம் (KAMBARAMAYANAM)

 கம்பராமாயணம்

ஆசிரியர் குறிப்பு:

பெயர்:கம்பர் 
காலம்:12ம் நூற்றாண்டு (2ம் குலோத்துங்கன் அமைச்சர்)
ஊர்:நாகப்பட்டினம் மாவட்டம்-மயிலாடுதுறை அருகே தேரெழுந்தூர்.
பணி:மூன்றாம் குலோத்துங்கன் அமைச்சர்.
ஆதரித்தவர்:சடையப்ப வள்ளல் (திருவெண்ணெய் நல்லூர்).

சிறப்பு பெயர்:

  • கம்ப நாடன் 
  • கம்ப நாட்டாழ்வான் 
  • கவி சக்ரவர்த்தி
நூல்கள்:
  • சடகோபரந்தாதி 
  • ஏரெழுபது 
  • சிலை எழுபது 
  • சரஸ்வதி அந்தாதி 
  • திருக்கை வழக்கம்

நூல்குறிப்பு:

6 காண்டங்கள் :(காண்டம் -பெரும்பிரிவு)
113 படலங்கள்:(படலம்-உட்பிரிவு)
10569 பாடல்கள் உடையது.

கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்:

  1. பாலகாண்டம் - குழந்தைப் பருவம்.
  2. அயோத்தியா காண்டம் -திருமண வாழ்வு.
  3. ஆரண்ய காண்டம்-வனவாசம்.
  4. கிட்கிந்தா காண்டம் -சீதையை பிரிதல்.
  5. சுந்தரகாண்டம் -அனுமனை குறித்து.
  6. யுத்த காண்டம் -இராமன்,இராவணன்.

கம்பராமாயணம் பற்றிய செய்திகள்:

  • ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட காண்டம் உத்திரகாண்டம் -7வது காண்டம்.
  • முதற்படலம் -ஆற்றுப்படலம் 
  • இறுதிப்படலம் -விடை கொடுத்த படலம் 
  • கம்பராமாயணத்தை "கம்ப நாடகம்" எனவும் "கம்பச்சித்திரம்" எனவும் கூறுவர்.
  • இராம காதைக்கு "ஆதிகாவியம்" என்றும்,அக்காதயை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு "ஆதிக்கவி" என்ற பெயரும் உண்டு.
  • கம்பர் 1000 பாடல்களுக்கு ஒரு வீதம் சடையப்ப வள்ளலை புகழ்ந்து பாடியுள்ளார்.
  • கம்பரின் சமகாலத்தவர்-ஜெயங்கொண்டார்,ஒட்டக்கூத்தர்,புகழேந்தி 
  • கம்பர் அதிகமாக பயன்படுத்திய அணி:தற்குறிப்பேற்ற அணி.
  • உழவர்களின் சிறப்பை கூறும் நூல்-ஏர் எழுபது,திருக்கை வழக்கம்.
  • கலைமகளைப் போற்றிப் பாடிய நூல்-சரஸ்வதி அந்தாதி.
  • நம்மாழ்வரைப் பற்றி பாடியது-சடகோபர் அந்தாதி.
  • கம்பரின் மகன் -அம்பிகாபதி (இவர் எழுதிய நூல் அம்பிகாபதிக் கோவை).
  • தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்சநிலையைத் தொட்டது.
  • கம்பரின் சமாதி உள்ள இடம்-நாட்டரசன் கோட்டை.
  • இராமனால் தம்பியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்:குகன்,சுக்ரீவன்,வீடணன்
  • இராமன் மனைவி-சீதை 
  • சீதைக்கு ஜானகி,மைதிலி என்று வேறு பெயர்களும் உண்டு.
  • தேவ-அசுரப்போர் 18 வருடம் நடந்தது.
  • இராமாயணப்போர் 18 மதம் நடந்தது.
  • மகாபாரதப்போர் 18 நாள் நடந்தது.
  • செங்குட்டுவனின் வடநாட்டுப்போர் 18 நாழிகை நடந்தது.
  • இராமணனுக்கும் சீதைக்கும் திருமணம் நடைபெற்ற இடம் -மிதிலை.
  • இராமனின் வனவாசம் 14 ஆண்டுகள்.
  • ராமனின் வில் -கோதண்டம்.
  • ராமன் அனுமனிடம் கொடுத்தனுப்பியது-கணையாழி(மோதிரம்).
  • சீதை அனுமனிடம் கொடுத்தனுப்பியது -சூடாமணி.
  • இலங்கையில் சீதை இருந்த இடம்-அசோகவனம்.
  • ராமனுக்காக சீதையிடம் தூது சென்றவர் அனுமன்.
  • ராமனுக்கு இராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.

தொடரால் குறிக்கப்படுவோர்:

  • சொல்லின் செல்வன் - அனுமன் 
  • தள்ளரிய பெருநீதியோன் -பரதன் 
  • தீராக்காதலன் - குகன் 
  • முறிய தேர்வலன் - சுமத்திரன் 
  • எண்ணினும் பெரியவன் -கும்பகர்ணன் 
  • கதிரோன் மைந்தன்-சுக்ரீவன்
  • நாய் அடியேன் -குகன்
  • தாயினும் நல்லான் - குகன்.
  • பண்ணவன்-இலக்குவன் 
  • கார்குலம் நிறத்தான்-ராமன் 
  • தீராக் காதலன்-குகன் 
  • இருந்த வள்ளல்-ராமன்.
  • வண்டுறை ஓதியும் வலியள்


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-சிறுபஞ்சமூலம்-காரியாசன்

சிறுபஞ்சமூலம்

ஆசிரியர்-காரியாசன்
சமயம்-சமணம் 
பாடல்கள்-கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் 
சிறப்பு-மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் "சிறப்புப்பாயிரம்" கூறுகிறது.
ஐவரும் கணிமேதாவியரும் ஒரு சாலை மாணாக்கராவார்.
இவரை மாக்காரியசன் என்று பாயிரச் செய்யுள் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறது.
ஐந்துவேர்கள்:கண்டங்கத்திரி,சிறுவழுதுணை,சிறுமல்லி,பெருமல்லி,சிறுநெறிஞ்சி.
ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன.
பெரும்பஞ்சமூலம்: வில்வம்,பெருங்குமிழ்,தழுதாழை,பாதிரி,வாகை முதலியானவற்றின் வேர்கள்.
மருந்தால் பெயர் பெற்ற நூல்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்.
மூலம் என்றால் வேர் என்று  பொருள் 
வேரால் பெயர் பெற்ற நூல்.

மேற்கோள்கள்:

"நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு"
"பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு"
"படைத்தனக்கு யானை வனப்பாகும்"
"சொல்லின் வனப்பே வனப்பு"

செவ்வாய், 5 ஜூலை, 2022

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-இனியவை நாற்பது-பூதஞ்சேந்தனார்

 இனியவை நாற்பது

ஆசிரியர்-பூதஞ்சேந்தனார்

ஊர்-மதுரை 

காலம்-கி.பி இரண்டாம் நூற்றாண்டு.

பாடல்கள்-40 பாடல்கள்.

சிறப்புப்பெயர்-மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

இந்நூலில் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துக்களை இனிமையாகக் கூறுகிறது.

124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்தில் சிவன்,திருமால்,பிரம்மா மூவரும் வணங்கபப்டுகின்றனர்.

மேற்கோள்கள்:

"பிச்சைப்புக் காயினும் கற்றல் மிகவினிதே"

"மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே"

"வருவாய் அறிந்த வழங்க லினிதே"

"ஏருடையான் வேளாண்மை தானினி(து).

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-இன்னா நாற்பது-கபிலர்

 இன்னா நாற்பது 

ஆசிரியர்-கபிலர்

காலம்-4ம் நூற்றாண்டு 

பாடல்கள்-40 இன்னிசை வெண்பாக்கள் 

சமயம்-சைவம் 

கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 41 வெண்பாக்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் சிவன்,திருமால்,முருகர்,பலராமன் ஆகியோரை வணங்கிப் பாடியுள்ளார்.

ஒவ்வொரு பாடலிலும் "இன்னா" என்னும் சொல் இடம்பெற்றுள்ளது.

துன்பம் தரும் செயல்களைத் தொகுத்து கூறும் நூல் இது.

மொத்தம் 164 இன்னா செயல்களை கூறியுள்ளது.

மேற்கோள்கள்:

"தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா"

"குழவிகள் உற்ற பிணி இன்னா"

"இன்னா பொருள் இல்லா வன்மை புரிவு"

"இன்னா-ஈன்றாளை ஓம்பாவிடல்"

"திருவுடையாரை - செறல் இன்னா"  

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-திரிகடுகம்-நல்லதானர்

 திரிகடுகம்

ஆசிரியர்-நல்லதானர் 

ஊர்-திருத்து-திருநெல்வேலி மாவட்டம்.

சமயம்-வைணவம் 

பாடல்கள்-100 வெண்பாக்கள் 

சிறப்பு பெயர்-"செரு அடுதோள் நல்லாதான்" எனப் "பாயிரம்" குறிப்பிடுகிறது.

சுக்கு,மிளகு,திப்பிலியால் ஆன மருந்துக்கு திரிகடுகம் எனப்பெயர்.இம்மருந்து உடல்நோயை போக்க வல்லது.திரிகடுகம் எனும் மறுந்துபோல் இந்நூலும் பாடல்தோறும் மூன்று கருத்துக்களை கொண்டு மக்களின் மனா நோயைப் போக்குகிறது.

ஒவ்வொரு பாடலிலும் "இம்மூன்றும் (அ) இம்மூவர்" எனும் வார்த்தை இடம் பெறுகிறது.

"அம்மை" எனும் வனப்பு வகையைச் சார்ந்தது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-முதுமொழிக்காஞ்சி-மதுரை கூடலூர் கிழார்

முதுமொழிக்காஞ்சி

ஆசிரியர்:மதுரை கூடலூர் கிழார்

பாடல்கள்:100

அதிகாரங்கள்:10(10*10=100)

காலம்:5-ம் நூற்றாண்டு

சிறப்பு பெயர்:அறவுரைக் கோவை,அறிவுடைய கூற்று.

முதுமொழிக் காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளில் ஒன்று.

இந்நூல் உலகியல் உண்மைகளை தெளிவாக எடுத்து இயம்ப உதவுகிறது.நிலையாமையைப் பற்றிக் கூறுகிறது.

முதுமொழிக்காஞ்சியில் 10 பத்துக்கள் உள்ளன.

  • சிறந்த பத்து 
  • அறிவுப்பத்து 
  • பழியாப்பத்து 
  • துவ்வாப்பத்து
  • அல்லபத்து
  • இல்லைப்பத்து 
  • பொய்ப்பத்து 
  • எளிய பத்து 
  • நல்கூர்த்த பத்து 
  • தாண்டாப் பத்து  
ஒவ்வொரு பத்தின் முதலடியும் "ஆர்கலி உலகத்து"என தொடங்கும் மதுரை கூடலூர்கிழார் பாடல்களை நச்சினார்க்கினியர் முதல் நல்லுரையாசிரியர்கள் வரை மேற்கோள்களாக கையாண்டுள்ளனர்.

இந்நூலில் உள்ள பாடல்கள் "குறள்வெண் செந்துறை" என்னும் யாப்பு அணியினால் படப்பெற்றவை.
 



திங்கள், 4 ஜூலை, 2022

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-நான்மணிக்கடிகை-விளம்பி நாகனார்

 நான்மணிக்கடிகை 

ஆசிரியர்:விளம்பி நாகனார்(விளம்பி-ஊர் பெயர்)

இயற்பெயர்:நாகனார்

பாடல்கள்:106 பாடல்கள்(104 வெண்பாக்கள் +2 கடவுள் வாழ்த்து)

காலம்:4ம் நூற்றாண்டு 

சமயம்:வைணவம் 

பாவகை:வெண்பா 

ஓவ்வொரு பாடலும் நான்கு மணிகள் போன்ற அறக்கருத்துக்களைக் கூறுவதால்,இந்நூல் நான்மணிக்கடிகை என அழைக்கப்படுகிறது.இந்நூல் "அம்மை என்ற வனப்பின் பாற்படும்" என பேராசிரியரும் நச்சினார்கினியரும் குறிப்பிடுவதால்,இந்நூல் "அம்மை" என்னும் வனப்பின் வகையைச் சார்ந்தது.

"கடிகை" என்றால் அணிகலன்(நகை),துண்டு,நாழிகை,கரகம்,தோள்வளை,காட்டுவடம் என்று பொருள்படும்.ஜி.யு.போப் இந்நூலில் உள்ள இரண்டு பாடல்களை மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

வைணவ சமயம் ஆதலால் கடவுள் வாழ்த்தில் "திருமாலை"வணங்கி பாடப்பட்டுள்ளது.

சனி, 2 ஜூலை, 2022

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-நாலடியார்-சமண முனிவர்கள்

நாலடியார்

ஆசிரியர்:சமண முனிவர்கள்

பாடல்கள்:400

அதிகாரங்கள்:40(அறம்-13;பொருள்-24;இன்பம்-3)

இயல்கள்:12

சிறப்பு பெயர்கள்:நாலடி நானூறு,வேளாண் வேதம்.

பாவகை:வெண்பா (நான்கடி)

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரே தொகை நூல் நாலடியார்.

திருக்குறளுக்கு அடுத்து புகழப்படு நூல்.

இந்நூலை முப்பாலாக பகுத்தவர்-தருமர்.

இந்நூலை தொகுத்தவர்-பதுமனார்.

இந்நூலுக்கு உரை எழுதியவர்கள்-தருமர்,பதுமனார்.

தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்ட "பெருமுத்தரையர்களை" பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.

இந்நூல் "நிலையாமை(செல்வம்,இளமை,யாக்கை),துறவறம்"குறித்து பாடியுள்ளது.

நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்-ஜி.யு.போப்.

நாலடியாரின் காலம் கி.பி.7ம் நூற்றாண்டு என கூறியவர்-எஸ்.வையாபுரிப்பிள்ளை.

பரிமேலழகர்,நச்சினார்க்கினியர்,அடியார்க்கு நல்லார் முதலியோர் இந்நூலை மேற்கோளாகக்  கையாண்டுள்ளனர்.

நூல் சிறப்பு

"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"-இதில் "நால்" என்பது  நாலடியாரைக்  குறிக்கும்.

"பழகு தமிழ்ச்  சொல்லருமை நால் இரண்டில்"

"சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது"


நாலடியாரில் உள்ள புகழ் பெற்ற தொடர்கள்

"கல்வி அழகே அழகு"
"கல்வி கரையில;கற்பவர் நாள்சில "
"ஆராய்ந்து அமைவுடைய கற்பவே,நீர்ஒழியப்
பாடல் உன் குறுகின் தெரிந்து"


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-அறநூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

"நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இந்நிலைய வாஞ் காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைநிலை யுமாம் கீழ்க்கணக்கு"

  1. நாலடியார் (அறம்)                                              
  2. கார் நாற்பது (அகம்)                                           
  3. நான்மணிக்கடிகை(அறம்)                              
  4. களவழி நாற்பது (புறம்)                                   
  5. பழமொழி நானூறு(அறம்)                            
  6. ஐந்திணை ஐம்பது(அகம்)                             
  7. முதுமொழிக் காஞ்சி(அறம்)                         
  8. ஐந்திணை எழுபது (அகம்)                            
  9. திரிகடுகம் (அறம்)
  10. திணைமொழி ஐம்பது(அகம்)
  11. இன்னா  நாற்பது (அறம்)
  12. திணைமாலை நூற்றைம்பது(அகம்)
  13. இனியவை நாற்பது(அறம்)
  14. ஆசாரக்கோவை(அறம்)
  15. சிறுபஞ்சமூலம் (அறம்)
  16. கைந்நிலை (அகம்) (அ) இன்னிலை (அறம்)
  17. ஏலாதி(அறம்)
  18. திருக்குறள் (அறம்)
  • பதினெண் மேற்கணக்கு அடிவரையறை  மிகுந்தது:ஆசிரியப்பாவின் செல்வாக்கு மிகுத்து.
  • பதினெண் கீழ்க்கணக்கு அடிவரையறை குறைவு:வெண்பாவின் செல்வாக்கு அதிகம்.
  • பதினெண் கீழ்க்கணக்கு காலம் சங்கம் மருவிய காலம்.
  • இதில் திருக்குறள் காலத்தால் முற்பட்டது மிக தொன்மையானது.
  • பதினெண் கீழ்கணக்கில் அறநூல்கள்:11
  • அகநூல்கள்:6
  • புறநூல்:1
  • பதினெண் கீழ்கணக்கில் உள்ள ஒரே புற நூல் களவழி நாற்பது.
  • அறநூல்களுக்கு நீதிநூல்கள் என்ற பெயரும் உண்டு.

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...