ஞாயிறு, 10 ஜூலை, 2022

புறநானூறு

புறநானூறு

  1. புறநானூறு-புறம்+நான்கு+நூறு.
  2. புறம் என்பது மரம் செய்தலும்,அறம் செய்தலும்.
  3. மறம்-வீரம்;அறம்-ஈகை,கொடை.
  4. புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது.
  5. இப்பாடல் வழியே பண்டைய தமிழக மன்னர்களின் அறஉணர்வு,வீரம்,கொடை,ஆட்சிச்சிறப்பு,கல்வி,பெருமை முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம்,மக்களுடைய நாகரிகம்,பண்பாடு போன்றவற்றை அறியலாம்.
  6. பாடல்கள்-400.
  7. பாடிய புலவர்கள்-165 பேர்.
  8. பாவகை-அகவற்பா.
  9. அடிகள்-4 அடி சிறுமையும் -40 அடிப்பெருமையும்.
  10. சிறப்புப்பெயர்கள்-புறப்பாட்டு,புறம்,தமிழர் கருவூலம்,நந்தா விளக்கம்.
  11. கடவுள் வாழ்த்துப் பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  12. புறநானூற்றில் 11 புறத் திணைகளும்,65 துறைகளும் உள்ளன.
  13. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்.
  14. புறநானூறில் அதிக பாடல்களை பாடியவர் ஒவையார்.
  15. புறநானூற்றை பதிப்பித்து வெளியிட்டவர்-உ.வே.சா (1984).
  16. அதியம்மனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர்-ஒவையார்.

புறநானூற்று மேற்கோள்கள்:


"செல்வத்துப் பயனே ஈதல்"
 "உண்பது நாழி;உடுப்பவை இரண்டே"-நக்கீரனார்.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"-குடப்புலவியனார்.

"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
  சாலார் சாலார் பாலர் அகுபவே"-கண்ணகனார்.

"கொடைமடம் படுத லல்லது
  படைமடம் படான்பிறர் படைமயக் குறினே"-பரணர்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
"தீதும் நன்றும் பிறர்தர வாரா"-கணியன் பூங்குன்றனார்.

"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"-மதுரை இளநாகனார்.

"கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறலொருவன்
  பணிக்குங் காலை யிறங்குவீர் மாதோ"-நரிவெரூஉத்தலையார்.

i)ஒவையார்

"நாடாகு ஒன்றோ;காடாகு ஒன்றோ;
  அவலாகு ஒன்றோ;மிசையாகு ஒன்றோ;
  எவ்வழி நல்லவர் ஆடவர்
  அவ்வழி நல்ல;வாழிய நிலனே!"
                                                         -ஒவையார்

சொற்பொருள்:
அவல்-பள்ளம்.
மிசை-மேடு.
ஆடவர்-ஆண்கள்.

ii)மோசிகீரனார்

  • பெயர்க்காரணம்-கீரன் என்பது குடிப்பெயர்.
  • ஊர்-தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி.
  • சிறப்பு-சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனால் கவரி வீசப்பெற்ற பெருமைக்குரியவர்.
  • பாடல்கள்-அகநானூறு,நற்றிணை,குறுந்தொகை,போன்ற நூல்களில் இவரது பாடல்கள் உள்ளன.
"நெல்லும் உயிரன்றோ;நீரும் உயிரன்றோ
  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
  அதனால் யான்உயிர் என்பது அறிகை
  வேன்மிகு தானை வேந்தற்குக்  கடனே"
                                                            -மோசிகீரனார்

சொற்பொருள்:
தானை-படை.
கடனே-கடமை.

iii)நக்கீரனார் 

  • சிறப்பு:இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
  • பாடல்கள்:திருமுருகாற்றுப்படையும்,நெடுநல்வாடையும் இயற்றியவர் இவரே.முதல் இலக்கண நூலை அகத்தியர் இயற்றினார் என்றும்,மூன்று தமிழ்ச்சங்கம் இருந்தது என்றும் களவியல் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
  வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
  நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
  கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
  உண்பது நாழி உடுப்பவை இரண்டே
  பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே
  செல்வத்துப் பயனே ஈதல்
 துய்ப்பேம் எனினே தப்புந பலவே"
                                                          -நக்கீரனார்
சொற்பொருள்:
துஞ்சான்-துயிலான்.
ஈதல்-கொடுத்தல்.
மா-விலங்கு.
துய்ப்போம்-நுகர்வோம்.
நாழி-அளவுப்பெயர்.
தப்புந-தவறுவன.

இலக்கணக்குறிப்பு:
நாழி-ஆகுபெயர்.
ஈதல்-தொழிற்பெயர்.
வெண்குடை-பண்புத்தொகை.
கல்லாஒருவற்கும்-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்.
துய்ப்போம்-தன்மைப் பன்மை வினைமுற்று.

iv)கண்ணகனார்

  • பணி-கோப்பெருஞ் சோழனின் அவைக்களப் புலவர்.
  • கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த போது பிசிராந்தையாரின் வருகைக்காக காத்திருந்தார்.
  • கோப்பெருஞ் சோழன் உயிர்துறந்தபோது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடலைப் பாடினார்.

"பொன்னும் துகிரும்,முத்தும் மன்னிய
  மாமலை பயந்த காமரு மணியும்
  இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
  அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
  ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர் 
  சான்றோர் பாலர் ஆப
  சாலார் சாலார் பாலர் ஆகுபவே"
                                                     -கண்ணகனார்

சொற்பொருள்:
துகிர் -பவளம்.
தொடை-மாலை.
சேய - தொலைவு.
கலம் -அணி.

இலக்கணக்குறிப்பு:
பொன்னும் துகிரும்,முத்தும் பவளமும் மணியும்- எண்ணும்மை.
அருவிலை,நன்கலம்-பண்புத்தொகை.
மாமலை-உரிச்சொல்தொடர்.


v)நரிவெரூஉத்தலையார்

  • பாடப்பட்டோன்-சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேறலிரும்பொறை.
  • இவரது பாடல்கள் குறுந்தொகையுலும்,திருவள்ளுவமாலையிலும் உள்ளன.
"பல்சான் றீரே பல்சான் றீரே
  கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
  பயனின் மூப்பிற் பல்சான்றீரே
  கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
  பிணிக்குங்காலை யிரங்குவீர் மாதே
  நலல்து செய்த லாற்றீ ராயினும்
  அல்லது செய்த லோம்புமி னதுதான்
  எல்லாரு முவப்ப தன்றியும்
  நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே"
                                                     -நரிவெரூஉத்தலையார்

பாவகை-நேரிசை ஆசிரியப்பா.
திணை-பொதுவியல்
துறை-பொருண்மொழிக் காஞ்சித்துறை


"எறிந்தி லங்கு சடைமுடி முனிவர் 
  புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று"
                                                     -புறப்பொருள் வெண்பாமாலை

சொற்பொருள்:
கயன்முள் - மீன்முள்.
ஒருவன்-யமன்.
கடுந்திறல்-கடுமையான வலிமை.
பல்சான்றீரே -பலராகிய சான்றோரே.
திரைக்கவுள் -சுருக்கங்களுடைய கன்னம்.
நெறியும்-வழியும்.
ஓம்புமின்-தவிர்த்துவிடுவீர்.

இலக்கணக்குறிப்பு:
கயன்முள்-6ம் வேற்றுமைத்தொகை. 
திரைகவுள் -வினைத்தொகை.
கூர்ம்படை,கடுந்திறல்-பண்புத்தொகை.
ஓம்புமின்-ஏவல் பன்மை வினைமுற்று.
படூஉம் -இசைநிறை அளபெடை (செய்யுளிசை அளபெடை).
ஆற்றீர்-முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...