பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
"நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இந்நிலைய வாஞ் காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைநிலை யுமாம் கீழ்க்கணக்கு"
- நாலடியார் (அறம்)
- கார் நாற்பது (அகம்)
- நான்மணிக்கடிகை(அறம்)
- களவழி நாற்பது (புறம்)
- பழமொழி நானூறு(அறம்)
- ஐந்திணை ஐம்பது(அகம்)
- முதுமொழிக் காஞ்சி(அறம்)
- ஐந்திணை எழுபது (அகம்)
- திரிகடுகம் (அறம்)
- திணைமொழி ஐம்பது(அகம்)
- இன்னா நாற்பது (அறம்)
- திணைமாலை நூற்றைம்பது(அகம்)
- இனியவை நாற்பது(அறம்)
- ஆசாரக்கோவை(அறம்)
- சிறுபஞ்சமூலம் (அறம்)
- கைந்நிலை (அகம்) (அ) இன்னிலை (அறம்)
- ஏலாதி(அறம்)
- திருக்குறள் (அறம்)
- பதினெண் மேற்கணக்கு அடிவரையறை மிகுந்தது:ஆசிரியப்பாவின் செல்வாக்கு மிகுத்து.
- பதினெண் கீழ்க்கணக்கு அடிவரையறை குறைவு:வெண்பாவின் செல்வாக்கு அதிகம்.
- பதினெண் கீழ்க்கணக்கு காலம் சங்கம் மருவிய காலம்.
- இதில் திருக்குறள் காலத்தால் முற்பட்டது மிக தொன்மையானது.
- பதினெண் கீழ்கணக்கில் அறநூல்கள்:11
- அகநூல்கள்:6
- புறநூல்:1
- பதினெண் கீழ்கணக்கில் உள்ள ஒரே புற நூல் களவழி நாற்பது.
- அறநூல்களுக்கு நீதிநூல்கள் என்ற பெயரும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக