முதுமொழிக்காஞ்சி
ஆசிரியர்:மதுரை கூடலூர் கிழார்
பாடல்கள்:100
அதிகாரங்கள்:10(10*10=100)
காலம்:5-ம் நூற்றாண்டு
சிறப்பு பெயர்:அறவுரைக் கோவை,அறிவுடைய கூற்று.
முதுமொழிக் காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளில் ஒன்று.
இந்நூல் உலகியல் உண்மைகளை தெளிவாக எடுத்து இயம்ப உதவுகிறது.நிலையாமையைப் பற்றிக் கூறுகிறது.
முதுமொழிக்காஞ்சியில் 10 பத்துக்கள் உள்ளன.
- சிறந்த பத்து
- அறிவுப்பத்து
- பழியாப்பத்து
- துவ்வாப்பத்து
- அல்லபத்து
- இல்லைப்பத்து
- பொய்ப்பத்து
- எளிய பத்து
- நல்கூர்த்த பத்து
- தாண்டாப் பத்து
ஒவ்வொரு பத்தின் முதலடியும் "ஆர்கலி உலகத்து"என தொடங்கும் மதுரை கூடலூர்கிழார் பாடல்களை நச்சினார்க்கினியர் முதல் நல்லுரையாசிரியர்கள் வரை மேற்கோள்களாக கையாண்டுள்ளனர்.
இந்நூலில் உள்ள பாடல்கள் "குறள்வெண் செந்துறை" என்னும் யாப்பு அணியினால் படப்பெற்றவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக