நேருஜி
இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்
- நாடு விடுதலை பெற்றபின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.நேரு 1922 முதல் 1964 வரை,42 ஆண்டுகள் தம்மக்களுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.தாகூரின் விசுவபாரதி கல்ல்லூரியில் இந்திராகாந்தி படித்த பொது,அவர் எழுதிய கடிதம் இது(அல்மோரா மாவட்டச் சிறைச்சாலையில் நேரு இக்கடிதம் எழுதினர்).
- இந்திராகாந்தி பேராசிரியர் கிருபாலினியின் உதவியுடன் பாடங்களைப் படித்தார்.புத்தகம் வாசிப்பது கடுமையாகவும்,கட்டாயமாகவும்,இருக்கக்கூடாது என்று நேரு கூறுகிறார்.ஆங்கிலப் படைப்பாளிகள் ஷேக்ஸ்பியர்,மில்டன் பற்றி நேரு பெருமைப்படக் கூறுகிறார்.சுவையானவை,சிந்தனையைத் தூண்டுபவை ,சுருக்கமாகவும் வாசிக்க எளிதாகவும் இருக்கும் என்கிறார்.
- காளிதாசரின் "சாகுந்தலம் நாடகம்" மற்றும் டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்"(இது உலகின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று) பற்றி கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
- நேருவுக்கு பிடித்த ஆங்கில எழுத்தாளர் பெட்ராண்ட் ரஸ்ஸல்.இவரது ஆங்கிலம் அருமையானது.இவரை அறிவு பூர்வமான எழுத்தாளர் என்கிறார் நேரு.1000 முகங்கள் கொண்டது வாழ்க்கை,அதைப் புரிந்துகொள்ளவும்,சரியாக வாழவும் புத்தகப்படிப்பு அவசியம் என்றும் கூறுகிறார்.
காந்தியடிகள்
- 1917ம் ஆண்டு ப்ரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை,மாணவர்களுக்கு ஏற்றவண்ணம் கடித்த வடிவில் அமைக்கப்பட்டது.
- பயிற்று மொழியைப் பற்றி நிறைவான,தெளிவான ஒரு முடிவுக்கு வருவதுதான் கல்வி.கற்பித்தலில் நாம் செய்ய வேண்டிய முதல் செயல் பயிற்றுமொழியைக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது.இது அடித்தளம் இல்லாமல் கட்டிடத்தை எழுப்புவதனைப் போன்றது.
- கவி இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்கு காரணம் ,ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த அறிவு மட்டுமின்றி,தம்முடைய தாய்மொழி மீது அவருக்கு இருந்த பற்றுதலும் தான்.
- முன்சிராம் பேசும்போது அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதற்குக் காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.உயர்ந்த மனம் படைத்த மதன்மோகன் மாளவியாவின் ஆங்கிலப்பேச்சு வெள்ளியைப் போல ஒளிவிட்டாலும்,அவரது தாய்மொழிப் பேச்சு,தங்கத்தைப் போன்று ஒளி இருக்கிறதே அன்றி,மொழியில் இல்லை.
- பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருத்தல் வேண்டும்.குழந்தைகளுக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும்.சிறந்தப்பயன் ஏற்பட வேண்டுமாயின்,அத்தகைய தொடர்பு இன்றியமையாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக