திங்கள், 11 ஜூலை, 2022

அகநானூறு

 அகநானூறு

  • அகநானூறு=அகம்+நான்கு+நூறு.
  • அகப்பொருள் சார்ந்த நானூறு அகவற்பாக்களால் தொகுக்கப்பட்ட தொகைநூல்.
  • பாடல்கள்:400,பாடிய புலவரகள்:145
  • அடிகள்:13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் கொண்டது.
  • தொகுத்தவர்:மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்.
  • தொகுப்பித்தவன்:பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர்:பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • சிறப்பு பெயர்கள்:நெடுந்தொகை,பெருந்தொகை நானூறு,அகப்பாட்டு.
  • அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருந்தாலும் அகம் என்ற பெயர் பெற்ற பழந்தமிழ் இலக்கிய நூல் அகநானூறு மட்டுமே.

அகநானூறு மூன்று பகுதிகள்

  1. களிற்றியானை நிறை -120 பாடல்கள்.
  2. மணிமிடை பவளம்-180 பாடல்கள்.
  3. நித்திலக்கோவை -100 பாடல்கள்.

  • வரலாற்றுச் செய்திகளை அதிகமாக் கூறும் அகநூல் - அகநானூறு.
  • குடைவோலை முறை தேர்தல் குறித்து குறிப்பிடப்படும் நூல் அகநானூறு.
  • யவனர் பொன்னைக் கொண்டு வந்து அதற்கு ஈடாக மிளகை பெற்று சென்ற செய்தியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
  • இந்நூலுக்கு உரை எழுதியுள்ளவர் -ந.மு.வேங்கடசாமி நாட்டார்.


  1. 1,3,5,7,9-என வருவன பாலைத்திணை பாடல்கள் (200)
  2. 2,8-என வருவன குறிஞ்சித் திணை -(80)
  3. 4,14-என வருவன முல்லைத்திணை -(40)
  4. 6,16-என வருவன மருதத் திணை -(40)
  5. 10,20-என வருவன நெய்தல் திணை -(40)

i)ஒவையார்

காலம்-சங்க காலம்
சிறப்பு-சங்ககால பெண்பாற் புலவர்களுள் சிறந்து விளங்கியவர்.
இவரது பாடல்களை புறநானூற்றிலும்,நற்றிணையிலும்,குறுந்தொகையிலும் காணலாம்.

"ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
  வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன
  ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை
  மூன்றுடன் ஈன்ற முடங்கள் நிழத்த 
  துறுகல் விடறளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்
  பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
 அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
 நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
 வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
 செலவயர்ந்த திசினால் யானே பலபுலந்து
 உண்ணா உயக்கமொடு உயிர்ச்செலச் சஅய்த் 
 தோளும் தொல்கவின் தொலைய நாளும்
 பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி
 மருந்துபிறி தின்மையின் இருந்துவினை இலனே"

சொற்பொருள்:
  • ஓங்குமலை -உயர்ந்த மலை.
  • பிணவு-பெண்புலி.
  • சிலம்பு-மலைச்சாரல்.
  • உழை-பெண்மான்.
  • உழுவை-ஆண்புலி.
  • ஓர்க்கும்-உற்றுக்கேட்கும்.
இலக்கண குறிப்பு:
    ஓங்குமலை,நீளிடை-வினைத்தொகை.
    பிரிந்தோர்-வினையாலணையும் பெயர்.
   அவிழாக் கோட்டுகிர்,நிரம்பா நீளிடை-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்.
சாஅய்- இசைநிறை அளபெடை.
தொல்கவின்-பண்புத்தொகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...