பண்புடைமை அதிகாரம்
1.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பொருள்:யாரிடத்திலும் எளிமையாக பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைதல் எளிது.
சொற்பொருள்:
வழக்கு-நல்வழியை.
எய்தல்-அடைவது.
2.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பொருள்:அன்புடையவராகத் திகழ்தல்,யுயர்ந்த குடிப்பிறப்பு ஆகிய இரண்டும் பண்பாளரின் இயல்பு.
சொற்பொருள்:
அன்பு உடமை-அன்புள்ளவனாயிருப்பதும்.
ஆன்ற குடிப்பிறத்தல் -சிறந்த குடியிலே பிறத்தல்.
3.உறுப்பொருத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்புதாம் ஒப்பு.
பொருள்:உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று.பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருக்க வேண்டும்.
சொற்பொருள்:
உறுப்பு ஒத்தல் -உடம்பால் ஒத்திருத்தல்.
ஒப்பதாம் -பொருந்துவதாகிய.
பண்புஒத்தல் -குணத்தால் ஒத்திருத்தல்.
4.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
பொருள்:நேர்மையும் அறத்தையும் கொண்டு பிறருக்கு உதவ வேண்டும்.அத்தகைய பண்பாளரையே உலகம் போற்றும்.
சொற்பொருள் :
நயனொடு -நீதியுடன்.
புரிந்து-விரும்பிய.
பாராட்டும்-கொண்டாடுவர்.
5.நகையுள்ளம் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளம்
பண்புள பாடறிவார் மாட்டு.
பொருள்:விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுதலும் துன்பத்தை தரும்.பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிருப்பின் நல்ல பண்புகள் இருக்கும்.
சொற்பொருள்:
இகழ்ச்சி-இகழ்தல்.
இன்னாது-துன்பந்தருவதாகும்.
படு அறிவர் மாட்டு-இயல்பறிந்து நடப்பவரிடம்.
6.பண்புடையர்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மண்ணாகிப் போய்விடும்.
பொருள்:உலகம் பண்புடையவர்களாலே நிலைபெற்று இருக்கிறது.இல்லையெனில் இவ்வுலகம் மண்ணோடு மண்ணாகிப் போய்விடும்.
சொற்பொருள்:
இன்றேல்-இல்லாவிட்டால்.
மண்புக்கு-மண்ணில் புகுந்து.
7.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்(பு) இல்லா தவர்.
பொருள்:ஆறாம் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருப்பினும்,மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓரறிவுடைய மரமாகவே கருதப்படுவர்.
சொற்பொருள்:
அரம்போலும்-அரத்தைப் போன்ற.
கூர்மையரேனும்-கூர்மையான அறிவுள்ளவராயினும்.
8.நண்பற்றா ராகி நயமில செய்வற்கும்
பண்பாற்றா ராதல் கடை.
பொருள்:நட்புக்கொள்ள இயலாதவராய்த் தீமை செய்பவரிடத்திலும் பண்புடையவராய்ப் பழக இயலாதது இழிவான செயலாகும்.
சொற்பொருள்:
நண்பு-நட்பினை.
நயமில -தீமைகளை.
நடவாமை கடை-குற்றமாகும்.
9.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
பொருள்:பிறரோடு பழகிப்பேசி மகிழ இயலாதவருக்கு மிகப்பெரிய இவ்வுலகம் பகலிலும் இருளாகவே தோன்றும்.
சொற்பொருள்:
மாயிரு ஞாலம்-பெரிய பூமி.
இருள்பால் -இருளனிடம்.
பட்டன்று-கிடந்ததாகும்.
10.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பொருள்:பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்றது.
சொற்பொருள்:
பெற்ற -அடைந்த.
நன்பால் -நல்லபால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக