நாலடியார்
ஆசிரியர்:சமண முனிவர்கள்
பாடல்கள்:400
அதிகாரங்கள்:40(அறம்-13;பொருள்-24;இன்பம்-3)
இயல்கள்:12
சிறப்பு பெயர்கள்:நாலடி நானூறு,வேளாண் வேதம்.
பாவகை:வெண்பா (நான்கடி)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரே தொகை நூல் நாலடியார்.
திருக்குறளுக்கு அடுத்து புகழப்படு நூல்.
இந்நூலை முப்பாலாக பகுத்தவர்-தருமர்.
இந்நூலை தொகுத்தவர்-பதுமனார்.
இந்நூலுக்கு உரை எழுதியவர்கள்-தருமர்,பதுமனார்.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்ட "பெருமுத்தரையர்களை" பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.
இந்நூல் "நிலையாமை(செல்வம்,இளமை,யாக்கை),துறவறம்"குறித்து பாடியுள்ளது.
நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்-ஜி.யு.போப்.
நாலடியாரின் காலம் கி.பி.7ம் நூற்றாண்டு என கூறியவர்-எஸ்.வையாபுரிப்பிள்ளை.
பரிமேலழகர்,நச்சினார்க்கினியர்,அடியார்க்கு நல்லார் முதலியோர் இந்நூலை மேற்கோளாகக் கையாண்டுள்ளனர்.
நூல் சிறப்பு
"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"-இதில் "நால்" என்பது நாலடியாரைக் குறிக்கும்.
"பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்"
"சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக