எட்டுத்தொகை
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து,ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை"
ஒத்த பதிற்றுப்பத்து,ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை"
- பத்துப்பாட்டும்,எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள்.இவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
- எட்டுத்தொகை குறைந்த அடிகளைக் கொண்டது.
- எட்டுத்தொகை நூல்கள் "என் பெருந்தொகை" எனவும் அழைக்கப்படுகிறது.
- எட்டுத்தொகை நூல்கள் அனைத்தும் "தொகைநூல்கள்".
- தலைவன் தலைவியின் அன்பு வாழ்க்கையைப் பற்றி கூறுவது அகநூல்கள்.இவை தலைவன் தலைவியின் பெயரை குறிப்பிடாது.
- தலைவன் தலைவியின் வீரம்.ஈகை வாழ்க்கையைப் பற்றி கூறுவது புறநூல்கள்.இவை தலைவன் தலைவியின் பெயர் குறிப்பிடப்படும்.
எட்டுத்தொகையில்:
அகநூல்கள்-5(நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,கலித்தொகை,அகநானூறு)
புறநூல்கள்-2(புறநானூறு,பதிற்றுப்பத்து)
அகமும் புறமும் கலந்தது-1 (பரிபாடல்)
பத்துப்பாட்டு
- பத்துப்பாட்டு அதிக அடிகளைக் கொண்டது.
- பத்துப்பாட்டிற்க்கு கடவுள் வாழ்த்துப் போல் வைத்து பாடப்பட்டுள்ள நூல்-திருமுருகாற்றுப்படை ,புலவராற்றுப்படை.
- ஆற்றுப்படை நூல்கள் பரிசு பெறுபவரின் பெயரால் பாடபப்டும்.திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசு கொடுப்பவரின்(முருகன்) பெயரால் அமைந்துள்ளது.
- பத்துப்பாட்டு என்ற தொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர்-மயிலைநாதர்.
- பத்துப்பட்டை பாடிய புலவர்கள் எட்டுப் பேர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக