வாணிதாசன்
- இயற்பெயர்:எதிராசுலு என்கிற அரங்கசாமி
- பெற்றோர்:அரங்க திருக்காமு - துளசியம்மாள்
- ஊர்:புதுவையை அடுத்துள்ள வில்லியனூர்
- காலம்:22.07.1915 முதல் 07.08.1974 வரை ஆகும்.
- இவர் பாரதிதாசன் பரம்பரையினர்.
- இவர் கவிதைகள் இயற்கையின் அழகை எழிலுறக் காட்டுவதால் தமிழகத்தின் "வேர்ட்ஸ் வொர்த்" என்றழைக்கப்பட்டார்.
- கவிஞரேறு,பாவலர்மணி என்னும் பட்டங்கள் பெற்றார்.ரமி என்கிற புனைபெயரும் உண்டு.
- இவர் தமிழ்- பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டு உள்ளார்.
- பிரெஞ்சு குடியரசு தலைவரால் செவிலியர் விருது பெற்றார்.
- மயிலை சிவமுத்து இவருக்கு தமிழ்நாட்டு தாகூர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
- தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
வாணிதாசன் எழுதிய நூல்கள்:
- இரவு வரவில்லை
- இன்ப இலக்கியம்
- இனிக்கும் பாட்டு
- எழில் விருத்தம்
- எழிலோவியம்
- குழந்தை இலக்கியம்
- கொடி முல்லை
- சிரித்த நுணா
- தமிழச்சி
- தீர்த்த யாத்திரை
- தொடுவானம்
- பாட்டரங்கப் பாடல்கள்
- பாட்டு பிறக்குமடா
- பெரிய இடத்துச் செய்தி
- பொங்கற்பரிசு
- வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
- வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
- வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
- விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக